குவைத்தில் இனி வீட்டு வேலைக்காக செல்லும் இந்தியப் பெண்களுக்கு ரூ.1 1/2 லட்சம் வங்கி உத்தரவாதம் அவசியம்!

எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 7 1/2 லட்சம் buy Levitra online இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 2.7 லட்சம் பேர் அந்நாட்டின் பொதுத்துறையிலும், 3.6 லட்சம் பேர் தனியார் துறையிலும் பணியாற்றுகின்றனர்.

தனியார் துறையில் பணியாற்றும் இந்தியர்களில் அங்கு வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

இனி, இந்தியாவில் இருந்து பெண்களை தங்களது வீட்டு வேலைக்காக குவைத்துக்கு அழைத்துவரும் நபர்கள் அந்நாட்டு அரசுக்கு 2,500 அமெரிக்க டாலர்களுக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த உத்தரவையடுத்து, அந்நாட்டு வங்கியில் 2,500 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்) உத்தரவாத தொகையாக செலுத்தி, அதற்கான அத்தாட்சியை குடியுரிமை துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பின்னரே, இந்தியாவில் இருந்து வேலைக்காக அந்நாட்டுக்கு வரும் பெண்களுக்கு உரிய விசா உள்ளிட்ட அனுமதிகள் அளிக்கப்படும்.

அந்த பெண்கள் குவைத்தில் தங்கியுள்ள நாள் வரையில் மேற்படி தொகை வங்கிக் கணக்கிலேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு வீட்டு வேலைக்காக செல்லும் இந்தியப் பெண்களின் நலனுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

14

Add Comment