மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன கே.எம்.காதர் முகைதீன் பேட்டி

201409131845527871_Functions-of-the-Central-GovernmentAre-satisfiedKM_SECVPF

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் முகைதீன் கூறினார்.

செயற்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் தென்காசியில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.எம்.காதர் முகைதீன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், நெல்லை பேட்டையில் 25 ஆண்டு காலமாக மூடி கிடக்கும் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலப்பாளையம் ஹாமிம்புரம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப மையவாடிக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நெல்லை நகரில் பாதாள சாக்கடை விரிவாக்கத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை கேட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பேட்டி

கூட்டத்துக்கு பின்னர் மாநில தலைவர் கே.எம்.காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி செயல்பாட்டுக்கு 52 மாவட்டங்களாக பிரித்துள்ளோம். நெல்லை மாவட்டம் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதற்கு மாவட்ட அமைப்பாளராக வி.டி.எஸ்.ஆர். முகம்மது இஸ்மாயில், துணை அமைப்பாளர்களாக கடையநல்லூர் செய்யது முகம்மது, புளியங்குடி காதர் மைதீன் மற்றும் 17 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

கிழக்கு மாவட்டத்தில் அம்பை, நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதற்கு மாவட்ட அமைப்பாளராக மீரான் கனி, துணை அமைப்பாளராக பாட்டபத்து முகம்மது அலி மற்றும் 15 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் 31–ந் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் நியமினம் முடிந்துவிடும்.

Buy cheap Amoxil justify;”>அல்கொய்தா கிளை

எங்களது கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம். மாநில செயலாளர் ஜீவகிரிதரன் இந்து மதத்தை சேர்ந்தவர் தான். இவரை போல் மேலும் பலர் நிர்வாகிகளாக உள்ளனர்.

அல்கொய்தா கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டு உள்ளது என்று தவறான பிரசாரம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாதுகாக்க இவர்கள் யாரும் தேவையில்லை. அந்த பிரசாரம் உண்மை என்றால் நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஈராக், சிரியா நாடுகளில் செயல்படும் அந்த அமைப்புகளை உலக முஸ்லிம்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக உள்ளன. அரசின் திட்டங்களில் எந்த குறையும் இல்லை. நல்ல திட்டங்களாகவே உள்ளன. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சாதனைகளாக மாற வேண்டும். அரசு பாராட்டக்கூடிய வகையிலே செயல்படுகிறது.

இவ்வாறு காதர் முகைதீன் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொது செயலாளர் அபுபக்கர், துணை செயலாளர் வி.டி.எஸ்.ஆர்.முகம்மது இஸ்மாயில், இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது அலி, மாவட்ட செயலாளர் மஜீத், மாணவர் அணி செயலாளர் செய்யது பட்டாணி, தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, செயலாளர்கள் எல்.கே.எஸ்.மீரான், செய்யது முகம்மது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

––

தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் காதர் முகைதீன் பேசிய போது எடுத்த படம்.

Add Comment