சென்னை: லிஃப்ட் வசதியுடன் 3 புதிய மேம்பாலங்கள்

சென்னை ராஜாஜி சாலையில் ரூபாய் 64 லட்சத்து 54 ஆயிரம் செலவிலும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் கிரிக்கெட் அரங்கம் அருகில் ரூபாய் 104 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், வாலாஜா சாலை-காயிதே மில்லத் சாலை சந்திப்பில் ரூபாய் 104 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், மின்தூக்கி (LIFT) வசதியுடன் கூடிய நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.74 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் மின் தூக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நிதி அமைச்சர் அன்பழகன் அடிக்கல் நாட்டிப் பேசினார்

மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் 5 நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை கடக்க 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது. ஸ்டாலின் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் இன்று சிறந்த முறையில் பயன்படுகிறது.

துறைமுகத்தில் கடந்த 10 வருடத்தில் 4 மடங்கு ஏற்றுமதி, இறக்குமதி அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு போக்குவரத்து வசதியும் மிக அவசியம். 50 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார நகரமாக சென்னை இருந்தது. பசுமை நிறைந்ததாக இருந்தது.

மக்கள் தொகை பெருக்கம், வணிகம் வளர்ச்சி போன்ற காரணங்களால் பசுமை மாறிவிட்டது. மறுபடியும் சென்னையில் பசுமையை கொண்டு வர மாநகராட்சி Buy cheap Doxycycline இருக்கும் சிறிய இடங்களில் எல்லாம் பூங்காக்கள் அமைத்து வருகிறது. இது சுகாதார கேட்டை பெரிதும் தடுக்கும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
ராஜாஜி சாலையில் லிப்ட் வசதியுடன் கூடிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டரை மாதத்தில் கட்டி முடிக்கப்படும். அதுபோல் வாலாஜா சாலையில் லிப்ட் வசதியுடன் கட்டப்படும் மேம்பாலங்களும் விரைவில் முடிக்கப்படும். கடந்த ஆண்டு 6 இடங்களில் லிப்ட் வசதியுடன் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்களில் விரைவில் பணி தொடங்கப்படும்.

அதோடு இந்த ஆண்டு 5 இடங்களில் புதியதாக லிப்ட் வசதியுடன் மேம்பாலம் கட்டப்படும்’ என்று உறுதி கூறினார்.

Add Comment