குர்பானி வவுச்சர்கள் சவூதி போஸ்ட் ஆபீஸில் விற்பனை

Bactrim No Prescription aligncenter” alt=”image001 (17)” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/image001-17.jpg” width=”580″ height=”350″ />

சவூதி போஸ்ட் ஏற்கனவே மொபைல் சிம் கார்டுகளை ஹஜ் பயணிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.  அத்துடன் ஹஜ் பயணிகள் குர்பானி கொடுப்பதற்கான வவுச்சர்களையும் சவூதி போஸ்ட் விற்பனை செய்யும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

குர்பானி வவுச்சர் விற்பனை நிலையங்கள் மக்கா புனித மஸ்ஜிதின் வாசல்களின் அருகிலும் அமைக்கப் பட்டுள்ளன. இதற்காக மக்காவில் 22 நிலையங்களில் 400அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். மினாவில் 6 நிலையங்களும், அரபாவில் 4நிலையங்களும்,, முஸ்தலிபாவில் 1 நிலையமும் அமைக்கப்படும். அத்துடன் அங்கீகாரம் பெற்ற நபர்களும் குர்பானி வவுச்சர்கள் விற்பனை செய்து சுற்றி வருவார்கள்.

சவூதி போஸ்ட் IDB விற்கு Al-Hadiy &  Al-Adahiee வவுச்சர்களை விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் குர்பானி கொடுப்பதற்கான வவுச்சர்களை வாங்கி குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு கிடைக்கச் செய்யலாம்.

புனித மக்கா, மதினா புகைப் படத்துடன் கூடிய வாழ்த்து மடல்களும் சவூதி போஸ்ட் ஆபீஸ் முலம் உலகில் எங்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கும் இயலும்.

தி,ரஹ்மத்துல்லா

Add Comment