உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

கடையநல்லூர்‬ உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்: நெல்லை கலெக்டர் தகவல்…

கடையநல்லூர் உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிகளின் பட்டியலை கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கடையநல்லூர் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு நாளை (18ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளுக்கு நாளை (18ம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதுகுறித்த விவரம் வருமாறு:

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்: கடையநல்லூர் 19வது வார்டு

இந்த பகுதிகளில் வணிகம், வியாபாரம், தொழில் நிறுவனங்கள், ஏனைய நிறுவனம், அமைப்புகளில் பணிபுரியும் பகுதிகளில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் ”மூடல்”…
வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 16ம் தேதி மாலை 5 மணி முதல் 18ம் தேதி மாலை 5 மணி வரை 48 மணி நேரமும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதிகளில் வாக்கு எண்ணும் நாளான 22ம் தேதியன்றும் Lasix No Prescription அரசு மதுக்கடைகள் மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Add Comment