கடையநல்லூரில்‬ குடும்ப தகராறில் தீக்காயம் ஏற்பட்ட கணவர் மரணம்!

கடையநல்லூரில்‬ குடும்ப தகராறில் தீக்காயம் ஏற்பட்ட கணவர் மரணம்!
கடையநல்லூர் கருத்தமன்னார் குடும்பத்தை சேர்ந்தவர் ஷேக்உதுமான் (வயது40). இவரது மனைவி அஜிதா (35). இவர்களுக்கு அபரா (10) என்ற மகள் உள்ளார்.
ரஹ்மானியா புரம் தெருவில் வசித்து வருகின்றனர்.கடந்த 11-ஆம் தேதி கணவருக்கும்-மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவி உடலில் தீ பிடித்து மரணமடைந்தார்.
இன்று  அவரின் கணவர் கருத்தமன்னார் குடும்பத்தை ஷேக் உதுமான் மரணமடைந்தார்.
கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சனை ஏற்ப்பட்டது என்ற முழு விபரம் எதுவும் தெரியவில்லை ,அவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் பொழுது எதனால் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தனர் என்று இதுவரை யாரிடமும் உண்மையான தகவல் இல்லை.
அவர்களின் வீட்டினுள் கணவனுக்கும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு வெளியில் தெரிய வாய்ப்பு மிகவும் குறைவு.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக கடையநல்லூரில் இந்த சம்பவத்தை மக்கள் பல கோணங்களில் விவாத்தித்த வண்ணம் உள்ளனர்.
 
அதுமட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் முகநூல்களிலும் பலதரப்பட்ட கருத்தக்கள் வெளியிடபடுகின்றன.
பத்திரிகை செய்தி… 

ஷேக் உதுமான் (40). இவரது மனைவி அஜிதா பர்வீன் (35). இவர்களுக்கு அப்ரா (10) என்ற மகள் உள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி கணவருக்கும்-மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஷேக் உதுமான் மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார்.

உடலில் தீப்பிடித்த அஜிதா பர்வீன் கதவை திறந்து தப்பிக்க முயன்ற போது ஷேக் உதுமான் மனைவியை வீட்டினுள் தள்ளி விட்டுள்ளார். இதனால் அவரும் படுகாயம் அடைந்தார். இதில் அஜிதா பர்வீன் அன்றைய தினமே பலியானார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷேக் உதுமானை சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஷேக் உதுமான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவர்,மனைவியை வீட்டினுள் தள்ளிவிட்டு மண்ணெணெய் ஊற்றி தீ வைத்திருந்தால் கணவர் மரணிக்க வாய்ப்பே இல்லை.ஆனால் இந்த சம்பவத்தில் கணவர் மேலும் தீ ஏற்பட்டு படுகாயம் அடைந்து இன்று அவரும் மரமடைந்துள்ளார்.இதுவும் யூகம்தான் உண்மை என்னவென்று இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

சம்பவத்தின் Viagra No Prescription உண்மை நிலைமை என்னவென்று தெரியாமல் காதால் கேட்ட செய்திகளை வெளியிடுவது சரியல்ல.

இறந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே மிக்க நல்லது.

Add Comment