லிபியாவில் மற்றொரு தமிழர் உயிர் இழப்பு

லிபியாவில் பலத்த காயங்களுடன் தப்ருக் நகரத்தில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று தமிழர்களில் நெல்லை தலைவன் கோட்டையைச் Buy Doxycycline சேர்ந்த முருகைய பாண்டியன் நேற்று உயிர் இழந்த துயரம் நீங்குவதற்குள் இன்று இன்னொரு தமிழர் உயிர் இழந்த செய்தி நெஞ்சை கலக்குவதாக உள்ளது.

மருத்துவ மனையில் கோமா நிலையில் இருந்து வந்த, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நாகர்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்ததாக அவரது பெற்றோருக்கு செய்தி கிடைத்துள்ளது.

மூன்றாவது நபர், நெல்லையைச்சேர்ந்த முத்துக்குமார் உடல் நலம் தேறி வருகிறார்.

முருகைய பாண்டியன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்த்ரவிட்டுள்ளதன் பேரில், இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் மூலம் முருகைய பாண்டியன் மனைவிக்கு பணம் வழங்கப்பட்டது.

Add Comment