கடையநல்லூரில் ஹஜரத்மார்களை கண்ணியம் செய்த பேட்டை மக்கள்!

கடையநல்லூர் பேட்டை ஜலாலியா மதரஸாவில் ரஹ்மானியாபுரம் Buy cheap Viagra பகுதியிலிருந்து நாங்கள் எழெட்டுப் பேர் குர்ஆனை நெஞ்சோடு அணைத்து ஓதச் செல்வோம். பெரிய அசரத் மர்ஹூம் லத்தீப் அசரத் அவர்கள் ஹாப்ஸா அசரத் அவர்கள் மர்ஹூம் ரஹீம் அசரத் அவர்கள் வருடம் ஒருமுறை வந்து வாழ வழிகாட்டிய ரகுமத்துல்லா அசரத் அவர்கள் போன்ற தெருக்கார அசரதமார்களின் நெருக்கமான மாணவன் நான்.

பேட்டை மக்களின் பேரன்பையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்கும் சிறு நரியைப்போல் நான் அவர்களைக்கண்டாலே பயந்து குருபக்தியுடன் பாடம் பயின்றேன். அலிப் பே ஆனக்கும் அவ்னக்கும் அலஹம்து அம்ம எதசா அலூன என்று தொடங்கி முப்பது ஜுஸ்வை கலீபா சாகிப் அசரத்திடம் கற்றுத் தேர்ந்து பேட்டைக்கு மனப்பாடம் ஓதச் சென்றேன். பேட்லக் நாக்குத்திருந்தாத உச்சரிப்பு என மீண்டும் பார்த்து ஓதவே சேர்த்தார்கள்.

எங்களுக்கு இதய ஒளியூட்டி இன்பமாக வாழ வழிகாட்டிய அசரத் லத்தீப் அவர்கள் இறந்தவுடன் அல்லிமூப்பன் தெருவிற்கும் பேட்டை மதரஸாவிற்கும் ஆயிரம் முறை அலைந்யிருப்பேன். பேட்டை மக்களின் பேரன்பிற்கு பெருமை சேர்க்க காதர்மைதீன் குத்பா பள்ளியிலேயே அடக்கம் செய்ய முடிவெடுத்தவுடன் அந்த தெருவில் ஒரு வீட்டில் ஜனாஸா கொண்டு வருவார்கள் என்று தம் நடை வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து தம் அசரத்திற்கு பெண்கள் கண்ணியம் செய்தனர்.

இதைப்பார்த்த அண்டை வீட்டார்கள் அணிதிரள அந்த தெருவே அலங்காரம் செய்யப்பட்டது. நான் மேற்கும் கிழக்கும் நடந்து நடந்து இதை மேற்பார்வையிட்டேன். காலப்போக்கில் கடையநல்லூர் தம் மண்ணில் பிறந்து தன்னுள்ளே சுவர்க்க நிலை காணும் (அல்லாஹ் அருள் புரியட்டும்) சில மா மேதைகளை நம் மக்களுக்கு நினைவூட்டவே இந்தப்பதிவு. அல்லாஹ் அவர்களை நாம் சுவனத்தில் காண அருள் பாலிப்பானாக ஆமின்.

Raja Mohamed ES

Add Comment