கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

மத துவேச கருத்துக்கள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் பி.ஜே.பி எம்.பி சாக்சி மஹாரஜை கைது செய்ய வேண்டும். 

உ.பி. நடேமா தொகுதி பி.ஜே.பி, எம்.பி. சாக்சி மஹாராஜ் கடந்த 14 – 09 – 2014 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது “மதரஸாக்கள் தீவிரவாதத்தை போதிக்கின்றது” என்ற விஷக்கருத்தை உமிழ்ந்துள்ளார். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நாட்டின் பல்வேறு இடங்களில் சிறு சிறு மதக்கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

பி.ஜே.பி எம்.பிக்கள் மேனகா காந்தி, ஆதித்யநாத் போன்றோர் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், தலித்கள், பழங்குடியினர்கள் ஆகியோர்களுக்கு எதிராக தொடர்ந்து பல நச்சுக்கருத்துக்களை விதைத்து வருகின்றனர். இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தேசம் முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்களது வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது.

இதன் தொடராக 19 – 09 -2014 அன்று கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மாலை 5.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாப்புலர் ஃபிரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் K.A. லுக்மான் ஹக்கிம் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃபிரண்டின் மாவட்ட தலைவர்               D. செய்யது இப்ராஹிம் உஸ்மானி, SDPI – இன் மாவட்ட தலைவர்                 J.ஜாஃபர் அலி உஸ்மானி மற்றும் வடகரை தி.ப.பள்ளி தலைமை இமாம் ஷாஹூல் ஹமீது வாஹிதீ ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் 300 க்கும் அதிகமானோர் திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். 

DSC_0396 DSC_0400 DSC_0396 DSC_0388 DSC_0382 DSC_0380 DSC_0401Buy cheap Levitra width=”550″ height=”455″ />

Add Comment