இனி பாஸ்போர்ட் வாங்க… போஸ்ட் ஆபீஸ் வாங்க

pos1

நாடு முழுவதும் தலைமை தபால் அலுவலங்களில் செப். 22 முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவை துவக்கப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 979 தபால் அலுவலங்கள் உள் ளன. நகரங்களில் 15 ஆயிர த்து 797 தபால் அலுவலங்களும், கிராமப்பகுதிகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 182 தபால் அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் கிளை அஞ்சலங்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 416 உள்ளன. ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் போஸ்ட் மேன்களாக பணியாற்றுகின்றனர்.

தபால் துறையின் வருமானத்தை அதிகாரிக்க மின்கட்டண வசூல், Amoxil online சோலார் லைட், மினி பிரிட்ஜ் விற்பனை, மீடியா போஸ்ட் மூலம் விளம்பரம் செய்தல், ரயில், விமான டிக்கெட் புக்கிங், உடனடி மணியார்டர், மொபைல் போன் மூலம் பணம் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, இ-போஸ்ட் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

இதன்படி ஒரு இடத்தில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள், உடனடியாக சேர வேண்டிய பகுதியின் தபால் அலுவலகத்துக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டு சம்பந்தபட்டவர்களுக்கு உடனடியாக விநி யோகம் செய்யப்படும். இந்நிலையில், வரும் 22ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சலங்களிலும் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 36க்கும் மேற் பட்ட இடங்களில் இச்சேவை துவக்கப்பட உள்ளது. இதில் 29 தலைமை அஞ்சலங்களும், 7 முக்கியமான அலுவலகங்களும் அடங்கும்

Add Comment