கடையநல்லூரில் TNTJ சார்பில் சூனியம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுக்கூட்டம்

சூனியம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுக்கூட்டம்.

   கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை  சார்பில் காயிதேமில்லத் திடலில் 19.09.2014 வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை சூனியம் & தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் துவக்கவுரையாற்றினார் மாவட்ட தலைவர் செய்யதலி செயலாளர் முகம்மது பைசல், பொருளாளர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் மேலாண்மை குழு உறுப்பினர் M.S.சுலைமான் அவர்கள் ‘சத்தியம் வென்றது சூனியம் அழிந்தது’’ என்ற தலைப்பிலும் மாநில பொதுச் செயலாளர் கோவை R. ரஹ்மத்துல்லாஹ்  அவர்கள் ‘தீவிரவாதத்திற்க்கு எதிரானது இஸ்லாம்’’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இக் கூட்டத்தில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், அமீன், சிராஜ், நிரஞ்சர்ஒலி, அப்துல் காதர், பிலால், குறிச்சி சுலைமான் மற்றும் பெரும் திரளாக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பேட்டை கிளை சிறப்பாக செய்து இருந்தது இறுதியில் பேட்டை கிளை பொருளாளர் மைதீன் அவர்கள் நன்றிவுரை நல்கினார்கள்.

இறுதியில்கீழ்கண்டதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை என்பதையும் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு ஏதிரானவர்கள் என்பதையும் முஸ்லீம் அல்லாத சமுதாய மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமை ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்துக்கும் இருக்கின்றது எனவே இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை கடையநல்லூர் நகர் முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தவும் இப் பொதுக்கூட்டம் தீர்மானிக்கிறது

 அல்-காயிதாவுக்கு இந்திய முஸ்லீம்களின் எச்சரிக்கை

மனித உயிர்கள் புனிதமானவை என்பது இஸ்லாத்தின் போதனை. இதற்கு எதிராகவும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் செயல்பட்டு வரும் அல்காயிதா இயக்கத்தை இப் பொதுக்கூட்டம் கண்டிப்பதுடன் முஸ்லீம்கள் அதன் கிளையை இந்தியாவில் எங்கும் அமைய விடாமல் அல்காயிதாவை விரட்டியடிக்க வேண்டும் என்று இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 இட ஒதிக்கீட்டுக்கான கோரிக்கை

Buy Cialis Online No Prescription style=”text-align: justify;”>தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இட ஒதுக்ககீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்றும் ஜெயல்லிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 தமிழக முதல்வருக்கு நன்றி.

கடையநல்லூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடையநல்லூரை தனி தாலுகாவாகவும், கடையநல்லூரில் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பின் இப்பொதுக்கூட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 கடையநல்லூர் அரசு மருத்துவமனையை கண்கானிக்க குழு அமைத்தல்.

கடையநல்லூர் அரசு மருத்துவமணைக்கு தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இறப்பது தொடர்கதையாகிவருகின்றது ஆகவே 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்கானிப்பு குழுவை ஏற்படுத்தி மருத்துவர்களை கண்கானிக்கும்படி சுகாதார துறையை இப் பொதுக்கட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் பொதுமக்கள் அணைவரும் அரசு மருத்துவமணையை பயன்படுத்த வேண்டும் என இப் பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்திற்கு.

பல வருடங்களாக கடையநல்லூர் பேட்டை பகுதியில் புதிய குடிநீர் பகிர்மான குழாய்  இணைப்புக்காக தோண்டப்பட்ட மரணக்குழிகளை உடனடியாக சரிசெய்து புதிய தார் சாலை விரைந்து அமைத்திட கடையநல்லூர் நகராட்சியை இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது

DSC_0426 DSC_0421 DSC_0433 unnamed (42)

 ,

Add Comment