மஸ்கட்டில் தந்தை-மகள் விபத்தில் பலி, மனைவி வீட்டில் மரணம்!

so1

அரபு நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் மஸ்கட் அருகே உள்ள சோஹர் இரும்பு Buy Bactrim Online No Prescription ஆலையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்தவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

சோஹர் நகரில் உள்ள இந்தியப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் தனது மகளுடன் நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்தபோது டேங்கர் லாரியின் மீது அந்த கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவருமே பரிதாபமாக பலியாகினர்.

இதுபற்றிய தகவலறிந்த அவரது நண்பர்கள் ஆஸ்பத்திரியின் பிணவறைக்குச் சென்று, இறந்தது அந்த நபர்தான் என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகு, அவரது மனைவிக்கு தகவல் சொல்வதற்காக போன் செய்தனர்.

ஓமனில் உள்ள ‘லார்ஸன் அண்ட் டோப்ரோ’ (எல் அண்ட் டி) கம்பனியில் பணியாற்றும் அந்தப் பெண், வெகுநேரம் வரை கைபேசியை எடுத்துப் பேசவில்லை.

தொடர்ந்து போன் செய்துப் பார்த்து சலித்துப் போன நண்பர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டினுள் அந்தப் பெண் பிணமாக கிடந்ததாக ஓமன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள ஓமன் ஊடகங்கள் அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்? பெயர், விபரம் ஆகியவற்றை வெளியிடவில்லை.

இந்த துயரச் சம்பவம் ஓமனில் மட்டுமின்றி, இச்செய்தியை அறிந்த அனைவரின் இதயங்களிலும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment