2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !

10641183_314477052057724_7296168729945037375_n

2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் Buy cheap Doxycycline பெறுவர்.

2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Comment