புதுப்பள்ளியும் புதிய பள்ளிவாசலும்

10418960_696475567094753_5778737711665761162_n

வெறும் வார்த்தைகளால் சில உணர்வுகளை கட்டமைக்க முடிவதில்லை,நினைவுகளாய் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கின்றன.அதன் வண்ணங்கள் சில நேரங்களில் கைகளில் அப்பிக்கொண்டு அழகு சேர்க்கின்றன.ஜீவ ரத்தம் நாளங்களில் பாய்ந்து அந்த நினைவுகளை இன்னமும் உயிர்பித்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

நெய்னா முஹம்மது குத்பா பள்ளி என்றால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.புதுப்பள்ளி என்றால் புதிதாய் பிறந்த பிள்ளை கூட கையை காட்டிவிடும்.புதுத்தெருவின் கீழ வட்டாரத்தின், புதுத்தெருவையும் வாணுவர் தெருவையும் இணைக்கும் முக்கில் இருக்கிறது இந்த புதுப்பள்ளிவாசல்.இப்போது புதுப்பித்து புதிதாய் கட்ட பட்டு திறப்பு விழாவிற்கு தாயாராகி விட்டது.

புதிதாய் கட்ட பட்டதால் அது புதுப்பள்ளி அல்ல, ஆண்டாண்டு காலமாகவே அதை நாங்கள் புதுப்பள்ளி என்றுதான் அழைக்கின்றோம்.

பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் கம்பி சட்டம் போட்டு மூடி வைத்திருக்கும் அந்த கிணறுதான் கண்களில் விழும், அந்த காலத்தில் ஏதோ தோட்டம் இருந்ததாகவும் அதற்காக வெட்டப்பட்ட கிணறுதான் இன்னும் அப்படியே இருக்கிறது.

ஒவ்வொரு முறை பள்ளிக்குள் செல்லும்பொழுதும் அந்த கிணற்றை எட்டிப்பார்க்காமல் கால்கள் எட்டிச்செல்லாது.

அந்த கிணற்றை தாண்டி ஹவுலுக்கு ஒது எடுக்க செல்லு வேண்டும், சின்ன வயதில் சில நேரங்களில் ஒது எடுக்கும் போது, தண்ணீரை கோரி அடுத்தவர் மீது தெளிப்பது உண்டு, அப்போது பக்கத்தில் ஒது எடுத்துக்கொண்டிருக்கும் பெரியவர் மீது தண்ணீர் பட அவர் சற்று கோபமாய் முறைத்த அனுபவம் அடிக்கடி நடந்திருக்கிறது.

Buy Bactrim Online No Prescription style=”text-align: justify;”>அந்த ஹவுலில் வயதானவர்கள் ஒது எடுக்க வசதியாக அங்கங்கு கட்டப்பட்டிருக்கும் அந்த தாம்புக்கயிறுக்கு எத்தனை வருட வரலாறு உண்டு என தெரியாது.அதில் எத்தனை எத்தனையோ கைகள் தொட்டு உறவாடியிருக்கின்றன.

சிறுவர்கள் ஒது எடுக்கும் போது ஹதுவுக்குள் விழ ஓடி வந்து அனைவரும் தூக்கிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்திருக்கிறது.

உள் பள்ளிக்கு நுழையும் முன்னரே இருக்கும் நகரா அடிக்கும் கொட்டு

ஒலிப்பெருக்கி வருவதற்கு முன் நகரா அடிக்கும் சத்தம் கேட்டவுடன் தான் தொழுகைக்கு ஆட்கள் புறப்படுவார்கள்

அங்கும் இங்கும் திரும்பி பார்த்து யாரும் பார்க்காத நேரத்தில் நகரா வை கையை வைத்து ஒரு தட்டு தட்டி மோதினாரிடம் திட்டுவாங்கிய கதையும் நடந்திருக்கிறது.நகரா அங்கு இருக்கும் வரை உள்ளே நுழையும போதெல்லாம் ஒரு தட்டு தட்டாமல் சென்றதில்லை .

ஜீம்மா பயான் இமாம் சொல்லிக்கொண்டிருக்க, ஒவ்வொருவராய் பள்ளிக்குள் செல்ல ஒரு கூட்டம் தாருஸ்ஸலாம் பள்ளிக்கூட

சிறிய மைதானத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்.

பயான் முடிந்ததும் அவசரவரமாய் ஒது எடுத்துக்கொண்டு உள்ளே ஓடும் கூட்டங்களும் உண்டு.

உள் பள்ளியில் நின்று தொழுகை என்பது சரித்திரத்தில் எப்போதாவது நடக்கும் விசயம். வரிசையை சரி செய்யும் போது யாராவது உள்ளே தள்ளிவிட்டால் மட்டுமே அது எங்களுக்கு சாத்தியமாய் இருந்திருக்கிறது. வெளிப்பள்ளியில் கடைசி சுவரில் சாய்ந்து கொண்டு

தெருவில் வீடுகளில் சமைக்கும் கறி வாசம் நாசியில் ஏற தொழுது முடித்து

ஸலாம் கொடுத்தவுடன் பாய்ந்தோடியதும் உண்டு.

மண் கொட்றாக்களின் மணத்தோடு

நோன்பு கால கஞ்சியும், கடைசி நோன்பு பாயாசத்தின் சுவையும் இன்னமும் இனிக்கிறது..

இப்படியாய் ஆயிரம் நினைவுகள் உண்டு புதுப்பள்ளி வாசலில். இப்போது அது புதிய பள்ளியாக அழகு பெற்றிருக்கிறது.நம்மோடு அன்று தோளோடு தோள் சேர்த்து நின்று தொழுதவர்கள் சிலர் இப்போது இல்லாமல் கூட இருக்கலாம்.ஆனால் நல்ல நினைவுகள் அங்கு புதைந்து கிடக்கின்றது, புதிய பள்ளிவாசலின் சுவர்களாகவும், பூசப்பட்டிருக்கும் வண்ணங்களாகவும் அந்த நினைவுகள் அழகாகிக்கொண்டிருக்கிறது.

அபூபக்கர் சித்திக்

Add Comment