கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

1919660_344375695723436_450777873108110229_n

பேட்டை முஸ்லிம் மாணவர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (21-9-14) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைவர். அரேபியன் மைதின், செயலாளர். அபுதாஹிர், பொருளாளர் இல்லியாஸ் ஆகியோர் தலைமை வகித்தார்கள்.

H.M. பாதுஷா சார் மற்றும் ஜமால் சார் ஆகியோர்முன்னிலை வகித்தார்கள் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில்

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

*உறுப்பினர் சேர்க்கையே அதிகபடுத்துதல் மற்றும் அவர்களின் ஆண்டு சந்தா 500ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

* பேட்டை ஸ்கூலில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களிடம் வருட சந்தா வசூலிக்கபடமாட்டாது எனவும் முடிவு செய்யபட்டது.

*பேட்டை முஸ்லிம் பள்ளிகூடத்தில்
ஆங்கில Doxycycline online வலிகல்வி ஆரம்பிப்பதற்கு ஊக்குவிப்பது.

*நகரின் முக்கிய பகுதிகளில் பேட்டை முஸ்லிம் மாணவர்கள் சங்கக்தின்(PISA) விழிப்புணர்வு விளம்பரபலகை வைப்பது போன்ற தீர்மானங்கள் ஆலோசிக்கபட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இச்சங்கத்தின் பெயரை (Register) பதிவு செய்வது பற்றியும் மேலும் பள்ளி மாணவர்களின் தனித்திறமையே வெளிப்படுத்துவதற்கு ஏற்ப நிகழ்சிகளை உருவாக்குதல் போன்றவை பற்றி யோசிக்கப்பட்டது.

PISA சார்பாக பேட்டை முஸ்லிம் பள்ளிக்கு வைக்கபட்டுள்ள வாட்டர் பில்டர் வாங்கிதந்த சகோதரருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் பொருளாளர் இலியாஸ் நன்றி தெறிவித்தார்.

10178146_344375522390120_5974631187691572038_n 10352331_344375852390087_4204781520662486559_n 10609518_344375385723467_5950365899315923864_n

Add Comment