கடையநல்லூர் குடும்பங்கள்

நல்லூரின் நன்முத்துகளே!

அன்பாய் பேசும் அசைனா அச்சுக்கட்டி அப்துல்லா அல்லிமூப்பன்களே
அழகாய் உறவாடும் அவுச்சாரிகளே
ஆனந்தமாய் உரையாடும் ஆதலெப்பைகளே
ஆர்ப்பரித்து பேசும் ஆமலெப்பைகளே

இன்பமாய் இருக்கும்
இந்தி இந்தி கலிபாக்களே
இணைந்து வாழும் இரசாலிகளே

உண்மை பேசும் உமர் தரகன்களே
உரக்க பேசும்
உமர்மன்னாக்களே

ஒற்றுமை பேணும் ஒரட்டி
ஒசைனா ஒட்டன் ஒசலாத்தன்களே

மௌனம் பேசும் மௌலாரன்களே
விரிந்து வாழும் விக்கிலான்களே
நட்பு நாடும் நரையன்களே

கரும்பாய் இனிக்கும் கம்புளி கருத்தமன்னார்
கலந்தரி கருத்தகலிபா
கருங்குளத்தான்களே

வான்புகழ் வாணத்தோடு வாவனார் வார்கட்டி வாவானார் வாவாகாசின்களே
சேர்ந்து வாழும் சேவக்கன் சேவரையன் சேயன் சேநூர் சேமிறான் செய்பு சிலமலெப்பை சேவலெப்பைகளே
கானம் பாடும் கானாத்தி காதர்தரகன் புலஞ்சக்கரி புலவர் புலவன் புலவன்கொசின்களே
தன்மையாய் பேசும் தட்டாக்குடியன் தங்கப்பளாய்ச்சிகளே
சொல்பேணும் சொன்னி சேவக்கன் செய்தரகன் செய்மாந்தரகன்களே கனிவாய்பேசும் கச்சி கம்பர்த்தான் கட்டையன் கலந்தரி கும்மாளிகளே

பெருமை சேர்க்கும் பெரிய முஸ்தபா பெருந்தரகன் பட்டாணி பகர்தீன் பக்கீர்லெப்பைகளே
மிடுக்காய் பேசும் மியான் மியலெப்பை மூப்பன் சேவு சேப்பிள்ளை முடவன் மூப்பன் மூக்பரி மூப்பர்மாப்பிள்ளைகளே

தெகட்டாமல் பேசும் தெங்கலெப்பை பாவோடி சேங்கர்களே கொஞ்சிப்பேசும் கொப்புளி மௌலா மௌலாபிச்சை அல்லாபிச்சை மொன்னலெப்பைகளே

மகிழ்வாய் பேசும் மஸ்தான்தரகன் மைனாட்டி மொன்னாட்டி காதர்தரகன்களே
சாந்தமாய் பேசும் சாகிபு சாளை கலுங்கு கலுங்குலாத்தன் மலஞ்சேவு குடும்பத்தினரே நீங்கள் எல்லோரும் நலம் வாழ நாயனை வேண்டுகிறேன்.

Raja Mohamed ES

Add Comment