கடையநல்லூரில் கடைகள் அடைப்பு!

தீர்ப்பு வெளியானதையொட்டி கடையநல்லூரில் கடைகள் அடைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, online pharmacy no prescription கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை தொடர்ந்து கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் முன்பு அ .தி.மு.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கடைகளை மூட சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தவண்ணம் உள்ளனர்.

ஆர்பாட்டம் செய்தவர்களை போலீசார் அப்புறபடுத்தினர்.

Add Comment