கடையநல்லூரில் திடல் தொழுகை நடத்த போட்டி ஆரம்பம்!

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறுவது வழக்கம்.இந்த பெருநாள் தொழுகையை யார் நடத்துவது என்பது கடையநல்லூரில் உள்ள இயக்கங்களுக்கு மத்தியில் போட்டி நடை பெறுவதும் பின்பு காவல்துறை,தாசில்தார் அலுவலகம் வரை சென்று முடிவு அறிவிப்பதும் ஒவ்வொரு வருடமும் நடை பெற்று வருகிறது.

2இதோ இந்த வருடமும் பெருநாள் தொழுகை நடத்த போட்டி ஆரம்பித்து விட்டது.இந்த போட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,முபாரக் நிர்வாக கமிட்டி  இடையே போட்டி நிலவி வருகிறது.வருகின்ற இந்த வருடம் 6ம் தேதி ஹஜ் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.இரு குழுவின் சார்பாக சிலர் சென்று தென்காசி தாதாசில்தார் முன்னிலையில் முறையிட உள்ளனர்.

பிற சமுதாய மக்களுக்கு எடுத்து காட்டாய் ஒற்றுமையாக அனைத்து இஸ்லாமியர்களும் கொண்டாடும் இந்த பெருநாள் தொழுகையை நடத்துவதில் தான் இவ்வவளவு சிக்கல்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் கூட இவ்வளவு டென்ஷன் இருக்காது போல இந்த திடல் தொழுகை நடத்துவதில் ஒவ்வொரு வருடமும் டென்ஷன் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

எது எப்படி இருந்தாலும் ,இந்த திடல் தொழுகை நடைபெறுவதை கடையநல்லூரில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக தொழுகை நடக்க வேண்டும் Buy cheap Amoxil என்பதே கடையநல்லூர் வாசிகள் அனைவரின் விருப்பமாகும்.

Add Comment