காயிதே மில்லத்திடலில் தொழுகை நடத்த தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுமதி

IMG_139499

காயிதே மில்லத்திடலில் – பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்த தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுமதி உதவி கலெக்டர் உத்தரவு
************************************************************

கடையநல்லூர் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுமதி அளித்து தென்காசி உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
கடையநல்லூர் நகரத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பண்டிகை நாட்களின் போது சிறப்புத் தொழுகை நடத்திட காயிதேமில்லத் திட லை பயன்படுத்துவதில் ஒவ்வொரு முறையும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இது சம்பந்தமாக வருவாய்துறை அதிகாரிகள் மட்டத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கே தொழுகை நடத்த அனுமதி அளித்து வந்தனர்.

இந்நிலையில் வரும் 6ந்தேதி நடக்க உள்ள பக்ரீத் பண்டிகையொட்டி கடையநல்லூர் காயிதே மில்லத்திடலில் எந்த அமைப்பு சிறப்புத் தொழுகை நடத்துவது என்பதில் இந்த முறையும் சிக்கல் எழுந்து இதையடுத்து தென்காசி உதவி கலெக்டர் ரெகோபயாம் தலைமையில் தொழுகை அனுமதி குறித்து சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்காசி தாசில்தார் சொர்ணராஜ், மண்டல துணைவட்டாட்சியர் அழகப்பராஜா, வருவாய் ஆய்வாளர் இசக்கிதுரை, கிராம நிர்வாக அதிகாரி சாந்தி, காவல்ஆய்வாளர் சபாபதி, மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டத்தலைவர் செய்யதலி, துனைச்செயலாளர் சாகுல் டவுன் கிளை தலைவர அய்யூப்கான், மஸ்ஜித் முபராக் கமிட்டி மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் கமிட்டி , ஆகியோர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் தொழுகை அனுமதி சம்பந்தமான இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக் நிலுவையில் இருப்பதாலும், அரசு வழக்கறிஞர்களிடம் பெறப்பட்ட சட்ட கருத்துரைகளின்; அடிப்படையின் பேரிலும் சென்ற முறை மேற்கொண்ட நடைமுறையை பின்பற்றி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் Buy Lasix Online No Prescription கடந்த 7 வருட காலமாக கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் பண்டிகை நாட்களில் சிறப்பு தொழுகை நடத்தி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மட்டுமே இந்த முறையும் 6ந் தேதி திங்கள் கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு தொழுகை நடத்த அனுமதியளித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Add Comment