சாதனை படைத்த மாணவர்களுக்கு “லேப்-டாப்’ பரிசு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சாதனை படைத்த 26 மாணவர்களுக்கு Cialis No Prescription ஐந்து லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், மாநில அளவில் முதல் ஆயிரம் இடங்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு, முதல்வர் கருணாநிதி, லேப்-டாப் வழங்கினார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியரின், உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கிறது.இதன்படி, கடந்த ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பாண்டியனுக்கு 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த சந்தியா, காருண்யா, தினேஷ் ஆகியோருக்கு தலா 30 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த பிரதக்ஷனா, அபிநயா, மனோசித்ரா, ஆண்டோ நசரேன், ஸ்ரீவித்யா சம்பத் ஆகியோருக்கு தலா 20 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.
அதேபோல, 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற ஜாஸ்மினுக்கு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற நிவேதா, சிவபிரியா, பிரியங்கா ஆகியோருக்கு தலா 20 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்ற ரம்யா, ஜெய்லின், திலகவதி, பிரதீப்குமார், ஜெயமுருகன், இந்துஜா, ராஜ் சூரியா, நர்ஷீன் பாத்திமா, மகேஷ்வரி ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும், மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பவித்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற வந்தனாவுக்கு 20 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்ற லாவண்யாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த 26 மாணவ, மாணவியருக்கும் முதல்வர் கருணாநிதி, மொத்தம் ஐந்து லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பரிசுத் தொகையாக, தலைமைச் செயலகத்தில் வழங்கி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதவிர, 10ம் வகுப்பில் தமிழ்வழியில் படித்து பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதல் ஆயிரம் இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப்களும் வழங்கப்பட்டன. நான்கு கோடியே 12 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில், இந்த ஆண்டு 1,100 மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவியருக்கு லேப்-டாப்களை முதல்வர் கருணாநிதி வழங்கி, இப்பணிகளை துவக்கி வைத்தார்.

Add Comment