மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் சபிக்கப்பட்ட மனிதனை முன்வைத்து …..(முடவன்குட்டி – கவிதை )

இவன் மனிதனா..?
திடுக்கிட்டு நின்றது காற்று:
கருகித் தீய்ந்தது சூரியன்:
வதங்கி உதிர்ந்தன
தளிர் இலை பூக்கள் ..

மனிதனல்ல மிருகம்:
இமையாது உருளும் கண்களாய்
காது மடலோரம்
பதுங்கிற்று- சட்டம்:
காவலோ-
புறந்தலை குறிவைத்து
அரவமற்றுப் பின் தொடரும்:

நீ தான் மிருகம் / இல்லை நீ தான்:
சொல்லியும் Buy Viagra Online No Prescription
சொல்லாது நழுவியும்
வியாபார விதி பேணி
உண்மையை
அளந்தே உரைத்தன-
பத்திரிகை… மீடியாக்கள்:

மனிதன் இறந்து விட்டான்:
புராதன வீட்டில்
நிழல்களாய் உலாவும்
மூதாதையர் முணுமுணுப்பை
மொழிபெயர்த்தது-சரித்திரம்.

சந்து முனையிலோ…சாலையோரமோ..
“பேரருள்” இரந்தபடி
அப்போதும் கேட்கும்
பள்ளிவாசல் பாங்கொலியும்..
கோயில்மணி ஓசையும்..

கால-இட-வெளி தாண்டிய
சூன்யத்தில்
ஓரொலியாய் எதிரொலிக்கும்
அதன் உள்ஒலி:
இதனின்றும் பிரிந்ததோர் கதிர் இழை
கீழே-
“சாபமாய்க்”கிடக்கும்
மனிதனின்
மனவாசல்
மெல்லத் தொடும்
“மனிதம்” வேண்டி.

***** ***** ***** ***** ***** ***** *****
குறிப்பு:
மதத்தின் பெயரால் வன்முறை:
” நீ மிருகம்”,” நீ செத்துவிட்டாய்”
என மனிதனைச் சபித்து- சட்டம், காவல், அரசு, மீடியா,
சரித்திரம் என சகலமும் அவனைக்
கைவிட்டு ஒதுங்கிக்கொள்ள-
அவனுக்கு ஆதரவாக வருவது -மதங்களெல்லாம்,
தமது ஆதார சுருதியாய் –
சதா இரந்தபடி இருக்கும் – “பேரருள்” தான்.
கவிதை இதனை மெல்லச்சொல்ல
முயல்கிறது. (சமரசம் ஆகஸ்ட் 1999 இதழில்
இக்கவிதை வெளி வந்தது. இக்கவிதையை
அனுப்பத் தயங்கினேன்: சமரசம் இதழ் ஆசிரியர்
சிராஜுல் ஹசன் கவிதையை சட் டென உள்வாங்கி
ஆத்மார்த்தமாகச் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது
“…பாய் ..அடிப்படையைத் தேடுறீங்க.. எழுதுங்க எழுதுங்க..
எதுவென்றாலும் போடுகிறேன்.. உங்க மேல
நம்பிக்கை இருக்கு “)

Add Comment