திருவில்லிக்கேணி மேன்ஷன்

சோம்பல் முறித்து, கண்கள் கசக்கி ,
கட்டில் விடுத்து, காலணி அணிந்து,
வெளிப்படுவான் ஒரு நத்தைபோல்!

மணி பத்தாச்சா? பொய்யாய் வியப்பான்,
புழுதி பறக்க படிகள் கடந்து,
தெருவிலிறங்கி நடப்பான்!

1/2 தேனீர், வெண்குழல் வற்றி,
ஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,
இனிதே முடித்து அறை திரும்புவான்!

நேர்காணல் இன்றா? தேர்வேதும் உண்டா?
யோசனை, விசாரிப்பும் பலமாய்,
பணிக்கான கனவில் வாழ்வான்!

ஞாயிறு, திங்கள் பேதமின்றி,
வாழ்க்கை போகும் பாதை எண்ணி,
நிதம் பீச் மணலில் தவமிருப்பான்!

பணமும் பாசமும் தொலைவிலிருக்க,
மனமும் மானமும் போய்திரும்ப,
வீட்டுக்கடனும், தங்கை முகமும்,
வெளிநாடு என்னும் முடிவைத்தரும்,

திருவல்லிக்கேணி எங்கும் இப்படியே!
எத்தனையோ ‘இவன்’கள் இங்கே இப்படியே!
ஓடுகிறது Buy Lasix காலமது இப்படியே!
முடிந்திடுமோ ‘இவன்’ வாழ்க்கை இங்கே இப்படியே??..

– நசீர் உஸ்மான்

Add Comment