பிரிட்டன் செய்தி ஊடகங்களின் கடும் விமர்சனங்கள்

12239470_904822532927557_6430612669009858617_nபிரிட்டனில் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கலாம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கலாம் ஆனால் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் காலையில் பிரிட்டன் செய்தி ஊடகங்களின் கடும் விமர்சனங்கள் முன் அவர் கண் விழித்துள்ளார்.

அனைத்து செய்தித் தாள்களும், தி கார்டியன் முதல் தி டைம்ஸ், டெய்லி மெயில், டெய்லி டெலிகிராப் மற்றும் தி இண்டிபெண்டண்ட் ஆகிய பத்திரிகைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை விடுத்து பிரதமர் மோடியின் குஜராத் முதல்வர் கால செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளன.

“Pomp and ceremony for an ex-pariah” என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை கடுமையான தலைப்பிட்டுள்ளது. இதுதவிர முதல் பக்கத்தில் படத்துடன் இட்ட தலைப்பில் ‘அனைத்தும் மன்னிக்கப்பட்டது, மிஸ்டர் மோடி’ என்று எழுதியுள்ளது.

தி டைம்ஸ் பத்திரிகையின் செய்தி ஒன்று இவ்வாறாகத் தொடங்குகிறது: “நரேந்திர மோடியின் கடந்த கால மனித உரிமை மீறல்களையும் கடந்து பிரிட்டன் இந்தியாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது என்று டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்.”

தி கார்டியனின் தலைப்பு: “பலத்த பாதுகாப்பு மற்றும் வரவேற்கத் தகாத நபருக்கு கேமரூனின் புகழுரை” என்று சாடியுள்ளது.

குஜராத் கலவரங்கள் நடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு அப்போதைய முதல்வர் மோடி லண்டன் வருவதை பிரிட்டன் அரசு ஒரு போதும் தடை செய்யவில்லை. 2003-ல் அவர் ஒருமுறை லண்டன் சென்றும் திரும்பியிருந்தார். இதனை மோடி வியாழனன்று தெளிவு படுத்தினார். ஆனால் 2012 வரை மோடியுடன் எந்த வித ஈடுபாடும் வேண்டாம் என்ற கொள்கையை பிரிட்டன் கடைபிடித்ததும் உண்மையே. கலவரங்களில் 3 பிரிட்டன் பயணிகள் கொல்லப்பட்டது குறித்து பிரிட்டன் நடவடிக்கையும் கோரியிருந்தது.

Buy cheap Bactrim style=”text-align: justify;”>இந்நிலையில் கேமரூனை மோடி சந்தித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இரண்டு கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட போது, “நான் இங்கு வருவதை பிரிட்டன் ஒரு போதும் நிறுத்தவில்லை. நான் ஏன் வரவில்லை என்றால் என்னுடைய காலநெருக்கடிகளினால் இருக்கலாம்” என்றார்.

இருப்பினும் தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை, வரவேற்கத்தக்க நபரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினாலும், மோடியுடன் மீண்டும் பிணப்பு ஏற்படுத்தி கொள்வது ராஜாங்க ரீதியான சிறந்த நகர்த்தல் என்று கூறியுள்ளது. அது தனது தலையங்கத்தில், “பிரிட்டன் மனித உரிமைகள் விவகாரத்தை எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளது. ஆனால் இதனை தக்க மரியாதையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் வெளியிட்டது. இதில் மோடி, கேமரூனிடம் பேசுவது போல் ‘என் கைகளில் ரத்தம் படிந்துள்ளது’(blood on my hands) என்ற வாசகமும், மகாத்மா காந்தி சிலை இதனை பார்க்குமாறும் அந்தக் கேலிச்சித்திரம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய விமர்சனங்கள் குறித்து தி இந்து கேட்ட போது, கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் மயூரி பார்மர் கூறியதாவது: எங்களுடையது ஜனநாயக சமூகம். இது வழக்கத்துக்கு மாறானதல்ல, தங்கள் தலைமையயே கடுமையான விமர்சிப்பதுதான் பிரிட்டன் ஊடகங்களின் இயல்பு. அவர்கள் கருத்துகளை கூற இடமுண்டு. வெம்ப்லியில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்து விமர்சகர்களுக்கும் பதில் அளிக்க வேண்டும், என்றார்

Add Comment