சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு

dengue_2629870h

dengue_2629870hசென்னை மாநகராட்சி தரவுகளின் படி இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்த மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கே அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை 96 டெங்கு கேஸ்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்த 1,955 காய்ச்சல் நோயாளிகளில் 545 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப் பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயிற்றுப்போக்குக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 113 என்று பதிவாகியுள்ளது. 4ம் மண்டலம் தண்டையார்பேட்டையில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்ற போதிலும் இந்த சீசனில் இது வழக்கத்துக்கு மாறானது அல்ல. பதற்றப்பட வேண்டிய நோய்ப்பரவல் அல்ல இது. நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நகரம் முழுதும் மருத்துவ buy Ampicillin online முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 1,530 முகாம்களின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் நோய் தொற்றை தடுக்க வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 14,4423 தெருக்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த 23 ஆட்டோரிக்‌ஷாக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2,57,000 நோய் எச்சரிக்கை அறிவிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன” என்றார்.

நகரம் முழுதும் 416 மொபைல் மருத்துவ குழுக்கள், 770 சுகாதாரக் குழுக்கள் உள்ளிட்டவை செயலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அரசு தரப்பு செய்தி குறிப்பும் தெரிவித்துள்ளது.

Comments

comments

Add Comment