விடாமல் கொட்டும் அடைமழை… மீண்டும் நெரிசலில் சிக்குவார்களா சென்னைவாசிகள்?

சென்னையில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழையால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகளும் சாலையில் நடந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை போல இன்றும் buy Amoxil online பிற்பகல் தொடங்கி விடாமல் மழை பெய்வதால் இன்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர் சென்னைவாசிகள்.

கடந்த வாரம் 23ம் தேதி திங்கட்கிழமையை சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய மழை மாலை 6 மணிக்கு விட்டது. அலுவலகம் முடிந்து 6 மணிக்கு தைரியமாக வீட்டுக்கு கிளம்பியவர்கள் சந்தித்த துயரம் கொடுமையானது. நள்ளிரவு தாண்டியும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தவர்கள் அதிகாலையில்தான் வீடுபோய் சேர்ந்தனர்.

Comments

comments

Add Comment