காணாமல் போன கல்பாக்கம் அணு மைய விஞ்ஞானி சிறையில்

காணாமல் போன கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), கடந்த 12 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கல்பாக்கம் Buy Lasix அருகே உள்ள அணுபுரம் ஊழியர் குடியிருப்பில் சரஸ்வதி அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சீஜா (30), கேரள மாநிலம் கண்ணூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

ராதாகிருஷ்ணன் கல்பாக்கத்திலும், அவரது மனைவி கேரளாவிலும் வேலை செய்து வருவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வது வழக்கம்.

பள்ளி விடுமுறை தினங்களில் சீஜா, கணவருடன் அணுபுரம் வீட்டில் வசிப்பார். கடந்த ஒரு மாதமாக கணவருடன் தங்கியிருந்த சீஜா, பள்ளி விடுமுறை முடிந்ததால் கடந்த 1ம் தேதி தான் கேரளா திரும்பினார்.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று திரும்பிய ராதாகிருஷ்ணன் இரவு 8.30 மணியளவில் மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது டிபன் சாப்பிட வெளியே போகிறேன் என கூறியுள்ளார்.

அப்போது வெளியே போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையானதால் அலுவலகத்துக்கும் வரவில்லை. அதே நேரத்தில் அவரது மனைவியும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சீஜா கல்பாக்கத்துக்கு விரைந்து வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தால் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்பாக்கத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் ராதாகிருஷ்ணனின் பைக் சிக்கியது.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் அவர் பல்லாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது தனது பெயர் விவரத்தையும், வீட்டு முகவரியையும் மாற்றிக் கொடுத்துள்ளார் என்ற விபரமும் தெரியவந்துள்ளது.

புழல் சிறையில் இருப்பது அவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது உறவினர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் அவர் ராதாகிருஷ்ணன் தான் என்பதை உறுதி்ப்படுத்தியுள்ளனர்.

Add Comment