திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு மத்திய அரசின் ‘தேசிய விருது

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு மத்திய அரசின் ‘தேசிய விருது

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு என்று மிகவும் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளில் மிகவும் முக்கியமானது. திருச்சி ஜாமல் முகமது கல்லூரி. குறிப்பாக முஸ்லீம் பெண்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பிரத்யோகமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜாமல் முகமது கல்லூரிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜாநஜிமுதீன், கல்லூரி முதல்வர் முகமதுசாலிகு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சி ஜமால் முகமது கல்லூரி சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவை புரிந்தமைக்காக இந்திராகாந்தி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தேசிய விருது கடந்த 19-ந் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியால் வழங்கப்பட்டது.

இந்த விருதினை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் அப்துல்ஹக்கீம் பெற்றார். இந்த விருதுக்காக இந்தியாவில் உள்ள 45 ஆயிரம் கல்லூரிகளில் இருந்து 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் இந்த முறை தமிழகத்தில் இருந்து 2 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் சிறந்த சமூக தொண்டு புரிந்தமைக்காக இந்திய அரசால் சிறந்த கல்லூரியாக ஜமால் முகமது கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. இது இந்த கல்லூரிக்கு மட்டும் இல்லாமல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளது.

இந்த விருதை பாராட்டி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கல்லூரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் கல்லூரியை வாழ்த்தினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அப்போது துணை முதல்வர் முகமது இப்ராகிம், கூடுதல் துணை முதல்வர் இஸ்மாயில் buy Levitra online முகைதீன் மற்றும் பலர் உடன் இருந்தனர். –

வாசுகிசங்கர்

Add Comment