ரயில்கள் ரத்து: குழந்தைகள், உடைமைகளுடன் பட்டினியோடு படாத பாடுபடும் பயணிகள்- உதவி எண்கள் அறிவிப்பு

திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலைவரை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலும் online pharmacy without prescription துண்டிக்கப்பட்டது.

மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். எழும்பூரில் இருந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. . சென்னையில் பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில்களில் பெரும்பாலானோர் பயணத்தை ரத்து செய்தனர்.

ரயில்வே உதவி எண்கள் மேலும், ரயில் ரத்து குறித்து தகவல்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – 044- 25330714 சென்னை எழும்பூர்- 044- 28190216 சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை – 044-29015204; 044-29015208 மதுரை – 0452-2308250 திருச்சி – 0431-2418992; 90038 64971,90038 64960 தஞ்சாவூர் – 90030 33265; 04362-230131 விழுப்புரம் – 90038 64959

Add Comment