அன்ரிசர்வ்டு பயணத்திற்கும் இனி முன்பதிவு செய்யலாம் : ரயில்வே அதிரடி

முன்பதிவு வசதி இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, மொபைல்போன்களின் மூலம் பெறலாம் என்று இந்தியன் ரயில்வே (இன்பர்மேசன் சிஸ்டம் பிரிவு) பொது மேலாளர் எஸ்.எஸ்.மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாத்தூர் கூறியதாவது, இனிமேல், முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. மொபைல்போன் மூலமாக, டிக்கெட்டை வாங்க முடியும் ‌என்று அவர் தெரிவித்தார். இதற்கான செயல்பாடுகள் தற்போது Buy Cialis இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மேலும், இது அனைத்துவிதமான (அடிப்படை வசதி மொபைல்போன்களிலும்) மொபைல்போனிலும் செயல்படத்தக்க வகையில் வசதி மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Add Comment