திமுகாவினர் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கழக உடன்பிறப்புகள் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது, இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மாநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. வரலாறு காணாத மழை, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மேலும் கவலை கொள்ள வைக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில், தமிழக மக்களைக் காப்பாற்ற அரசு எடுக்கும் அனைத்து buy Bactrim online நிவாரணப் பணிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவை அளிக்கிறது.

மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய இரு எண்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக அலுவலகங்களையும் அந்தந்த தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக உடன்பிறப்புகள் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள், உணவு வழங்குதல் மேலும் பல உதவிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மக்கள் விழிப்புடன் இருந்து இந்த துயரமான தருணத்தில் எங்களுடைய கழகத் தோழர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Add Comment