வாழப் பிடிக்கவில்லை சாகப் பிடித்திருக்கிறது

இப்படித்தான் இரவு முழுக்க என்னுடைய எண்ணச் சிதறல்கள் இருந்தன. எல்லாம் ஒரேயொரு காரணம்தான் வாழப் பிடிக்கவில்லை பாருங்கள். காலையில் எழுந்ததும் இந்த சிந்தனை என்னை மீண்டும் ஆட்பரித்துக் கொண்டது. ஏன் என்று எனக்குப் புரிகின்றது. தற்போது இதனை எழுத ஆரம்பித்த கனப் பொழுதில் ஒரு நுளம்பு என்னை பதம் பாhத்துவிட்டு திரும்ப முனைந்தது. நான் என்ன சும்மா விட்டுவிடுவேனா? என்னை பதம் பார்த்த அந்த நுளம்பை அதே கனத்தில் அடித்து சாகடித்து விட்டேன். அதற்கும் சாகப் பிடித்திருக்கின்றது. தற்போது Buy cheap Bactrim இதனை எழுதிக் கொண்டிருப்பது இரத்தம் தோய்ந்த கைகளுடனும், கொலை செய்த பாவியாகவும்தான் என்பதனை நீங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். எத்தனை கல் நெஞ்சாக இருப்பினும் அதனுள்; இருக்கும் ஈரம் சிலவேளைகளில் வெளிப்படத்தான் செய்கிறது.

காலையில் வெளியே புறப்பட்டு வீதியில் சென்று கொண்டிருக்கும் வேளை திடீரென ஒரு துவிச்சக்கர வண்டியில் ஒருவன் என்னை கடந்து மிகவும் வேகமாகச் சென்ற மாத்திரத்தில் ஒரு வேன் குறுக்கே வந்ததனால் சடுக்கென நிறுத்த முனைந்தான்;. பாவிப்பயல் மயிரிளையில் தப்பி விட்டான். அவனுக்கும் சாகப்பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறே வழியில் சென்று கொண்டிருக்கையில் பாரியளவில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்றை சற்று எனது கண்களையும் மனதையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது. அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும் வடிவமைப்பும் எனது உள்ளத்தனை சற்று பதம் பார்த்தது. அது உண்மையில் வர்ணப் புச்சுக்கான விளம்பரம். அந்த விளம்பரத்தில் ஒருவர் கதிரையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றார். அருகில் ஒரு வர்ணப் பூச்சு வாளி ஒன்று இருக்கின்றது. அத்தோடு அங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் ‘கவலை வேண்டாம், இந்த மதில் சுத்தமாக்கப் பட்டிருக்கும்’. (டியுலக்ஸ் வர்ணப் பூச்சுக்காக பேஸ்லைன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகையில்தான் இவை காணப்படுகின்றன.)

வாழ்விலும் இப்படித்தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எமக்கு கிடைக்கின்ற கவலைகளும், இழி சொற்களும், அவமானமும், ஏமாற்றங்களும், பித்தலாட்டங்களும், மாத்து நொடிகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும்தான் அந்த வர்ணப் பூச்சு வாளியில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட நான்தான் அந்த ஆசனத்தில் சோகமாய் அமர்ந்து கொண்டிருந்தேன். இங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் எனக்குத்தான் அப்போது முழுமையாக பொருந்துகின்றது பாருங்கள்.

Add Comment