அரசு ஊழியர்களை பாராட்டியே ஆகவேண்டும்

12313750_985610021514032_7943954275495903426_n

12313750_985610021514032_7943954275495903426_n12308593_985610061514028_8487049788405899990_n“ஒருத்தரும் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறதில்லை. யாருக்கும் பொறுப்பில்லை. எப்பவும் எதிலும் அலட்சியம். இவங்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்கி, தனியார்கிட்ட கொடுத்துடணும் சார். அப்போதான் இந்த நாடு உருப்படும்”
இந்த டயலாகை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். (சில சமயம் விரக்தியில் நானும் சொன்னதுண்டு.)

இப்போது பெருமழை ஊழித் தாண்டவமாடுகிறது.
சொந்த வீடு பெருமை பேசியவர்கள் எல்லாம் வீதியில் நிற்கின்றனர்.

பள்ளிக்கூடங்கள் எல்லாம் அகதிகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

அடுத்து என்ன? என்று மக்களுடன் அரசாங்கமும் திகைத்து நிற்கிறது.

கருத்து சொன்ன கந்தசாமிகள் எல்லாம் பாதுகாப்பாக அவரவர் வீட்டில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க,

அவர்கள் பெரும் நம்பிக்கையைப் பெற்ற டாடா, அம்பானி, அதானி எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க,

இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, பொங்கி வரும் ஏரியில் குதித்து மதகுகளை சரி செய்யும் பொதுப்பணித்துறை ஊழியர்களும்,

கொட்டும் மழையிலும், வெற்றுடம்புடன் சாக்கடையில் குதித்து, வெறுங்கையாலேயே அடைத்துக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளை வாரி வெளியே போடும் மாநகராட்சி ஊழியர்களும்,

கீழே வெள்ளமும் மேலே மழையும் கொட்டிக் கொண்டு இருந்தும் எந்தப் பாதுகாப்புமின்றி துணிச்சலாக டிரான்ஸ்ஃபாரத்தில் ஏறி மின் தடங்களை சரி செய்து தரும் மின்வாரிய ஊழியர்களும்,

அரசு தந்த ஓட்டைப் பேருந்துகளின் உள்ளே, தன் தலைக்கு மேலே கொட்டும் நீரிலிருந்து தப்பிக்க தலையில் ப்ளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு வெள்ளம் பாயும் ஓட்டைச் சாலைகளில் பேருந்துகளை இயக்கும் மாநகர போக்குவரத்து ஊழியர்களும்,

எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுச் செல்லும் ஆற்று வெள்ளத்தில் துணிச்சலாக குதித்து, வீட்டில் வந்து சேரும் விஷப்பாம்புகளை வெறும்கையில் தூக்கி, ஆள் உயர தண்ணீரிலும் நீந்தி சென்று கடமையாற்றும் தீயணைப்புத்துறை வீரர்களும்தான்

இப்போது கதியற்று திகைத்து நிற்கும் சாமானிய மக்களுடன் துணை நிற்கின்றனர்.

இரவு, பகல் இல்லை. வீடு, மனைவி கவலை இல்லை. பசி, தூக்கம்,ஓய்வு இல்லை.

குறைந்த பட்சம் அருகில் இருந்து தட்டிக் கொடுக்க எந்த அதிகார வர்க்கங்களும் இல்லை.

இருந்தும், துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை வணங்குகிறேன்.

மக்கள் பணியாற்றும் இவர்களை அரசு ஊழியர்கள் என்றும்
அதிகாரத்துக்கு அலைபவர்களை மக்கள் தொண்டர் என்றும்
பெயரிட்டு அழைக்கும் இந்த சமூகத்தின் நகைமுரண் கண்டு வியக்கிறேன்.

இந்தக் Ampicillin online கொடுங்கனவு முடிந்தவுடன், சிறந்த முறையில் பணியாற்றிய இத்தகைய என்று தோன்றுகிறது.

Comments

comments

Add Comment