வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள்

* முதற்காரியமாக சென்னையில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள். ‘என்னப்பா… டி.வில ஏரி உடைஞ்சிருச்சுனு சொல்றான். உன் வீட்டுக்குப் பின்னாடிதானே அது இருக்கு’ என்றெல்லாம் பீதி கிளப்பாதீர்கள். தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகளை பரப்புவரை தவிர்க்கவும்.

* சென்னைவாசிகளின் வாட்ஸ்அப்களுக்கு தேவையில்லாத ஃபார்வர்ட் மெசேஜ், மழை மீம்ஸ், மொக்கை ஜோக்குகளை இரண்டொரு நாட்களுக்கு அனுப்பாதீர்கள். அத்யாவசிய தகவல்கள் வாட்ஸ்அப் மூலமே பரவும் இந்நேரத்தில், அப்படியான அநாவசிய தகவல்கள் அலைபேசி சார்ஜை குறைக்கும், டேட்டாவை காலி செய்யும். இந்த தருணத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு அழைப்புமே அத்தியாவசியம்!

** ’சென்னையில் என் மகள், மகன் படிக்கிறார்/வேலை பார்க்கிறார். அவர்களுக்கு உதவச் செல்கிறேன்’ என்று உடனே கிளம்பி வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் சென்னைக்கு வருவதே சிரமம். ஒருவேளை வந்துவிட்டாலும், கோயம்பேடு/எக்மோர்/தாம்பரம்/சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வருவது கடினமான காரியம். வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நீங்கள் திண்டாடினால், உங்களை மீட்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகிவிடும். உங்கள் மகன்/மகளை சென்னையில் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் உறவினர் வீடுகளில் சென்று தங்க சொல்லுங்கள். தேவையில்லாமல் நீங்கள் இங்கு வந்து அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்க வேண்டாம்.

* அதே போல சென்னையில் இருப்பவர்களையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லாதீர்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் சாலை வசதி இல்லை. எக்மோரிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. விமான சேவைகள் கூட செயலிழந்துள்ளன. அதனால் சென்னையிலிருந்து கார், பேருந்து, ரயில், விமானம் வழியாக எங்கும் நகர முடியாத நிலை உள்ளது.

* ஃபேஸ்புக்/ட்விட்டர் Ampicillin No Prescription போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் ‪#‎VERIFIED‬ என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள்.

* பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வெள்ள நிவாரணக் குழு என அரசு இயந்திரத்தில் பணி புரிபவர்களாகவோ, அல்லது அதோடு தொடர்பில் இருப்பவர்களாகவோ இருந்தால், மீட்புப் பணி குறித்த ஊர்ஜிதமான தகவல்களைப் பகிரலாம். அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களை சம்மந்தப்பட்ட துறையினரிடம் சேர்ப்பிக்கலாம்!

* மிக முக்கியமாக ’மழை சென்னையை சுத்தம் செஞ்சுட்டுப் போகும்னு பார்த்தா, சுத்தமா செஞ்சுட்டுதான் போகும் போல’ என்பது போன்ற மழை மீம்ஸ், ’ஏய் மழையே… ஏன் செய்கிறாய் இந்தப் பிழையை’ என்பது போன்ற மழை கவிதைகளை உருவாக்கிப் பரப்பாதீர்கள்.ஏனென்றால் மழையில்லாத வாழ்வை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

Add Comment