குவைத்-கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்கள்

குவைத்-கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்கள்;

(K-kms)-வுடைய மூன்றாவது மீட்டிங் 
(27-11-2015) மிக சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கிராத்து (இறைவசனத்து)டன் ஆரமித்து buy Lasix online துவாவுடன் இனிதே முடிந்தது.

சுமார் மூன்று மணி நேரம் பல தகவல்களைப் பற்றி பேசப்பட்டது.
சென்ற மாதம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18- நபர்கள்.தற்ச்சமயம் புதியதாக 10-நபர்கள் இணைந்து மொத்தம் 28-நபர்கள் இருக்கிறார்கள்.

நிர்வாகத்தில் பேசப்பட்ட விஷயங்கள்.

(1)K-Kms -க்கு லோகோ வை உருவாக்குவது.

(2) K-Kms சார்பாக (இன்ஷா அல்லாஹ்) வருகின்ற 2016-பிப்ரவரி மாதம் உம்ராவிற்கு ஏற்பாடு செய்தல்.

(3)இன்ஷா அல்லாஹ் K-Kms-உறுப்பினர்கள் அனைவர்களும் ஜனவரி 2016-முதல் மாதத்திலிருந்து குறைந்தபட்ச மாத சந்தா தொகையாக ஒரு தினார் (1KD) கொடுத்தல்.சந்தாக்கள் கொடுத்த தொகையையும்,நபரின் விபரங்களை (இமேஜ்) முறையில் K-kms வாட்ஸ்சப் குழுமத்தில் உடனுக்குடன் பதிவு செய்தல்.

(4)பொருளாளர்களின் தகவல்-ஃபஹாஹீல்,மங்காஃப் அதை சுற்றியுள்ள பகுதிகளின் சந்தாக்களை சகோதரர் Ishaq Msm-அவர்களிடமும்,

பர்வானியா,ஷுவைக் அதை சுற்றியுள்ள பகுதிகளின் சந்தாக்களை சகோதரர் Mas Masoodஅவர்களிடமும்,

குவைத் சிட்டி,ஷர்க் ஏனைய பிற பகுதிகளின் சந்தாக்களை சகோதரர் Msk Kuthousஅவர்களிடமும் கொடுக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் சில நபர்களுக்கு வேலை இருப்பதின் காரணமாக வர முடியவில்லை.கலந்து கொண்ட 12-நபர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியே தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிர்வாகத்தின் நற்செயல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதற்கும்,நிர்வாகம் மென்மேலும் வளர்ச்சி அடையவும் துஆ செய்யுங்கள்.

(இன்ஷா அல்லாஹ்) பதிவுகள் தொடரும்.

இப்படிக்கு-K-Kms.

நிர்வாகத்தின் அலைபேசி-
மசூது – 55590370,
அப்துல் காதர் – 55509266,
அப்துல் குத்தூஸ் – 51131540.

 

Add Comment