இன்னும் வடியாமலே விடிகிறது…

இன்னும் வடியாமலே விடிகிறது…
—————————————————
சென்னை நோக்கி வடநாட்டு ஊடகங்கள் பரபரப்பான கூச்சல் குழப்பம் மிக்க செய்திகளை படம் பிடித்துப் பரப்பி டி ஆர் பி யை உயர்த்திடப் பறந்து வருகின்றனர்……
பசியோடு உண்ண உணவின்றி தாகத்துடன் குடிக்க நீரின்றி, ஒழுகும் வானத்தின் நீரணைந்த கோழிகளாய் நடுங்கித் தவிக்கும் உறவுகளின் கண்ணீருடனான முக ரேகைகளை பதிகின்றன கருவிகள்.. அதிகம் பாதிக்கப்பட்டு அனாதையாய் நிற்பவருக்கு முகம் காட்ட முன்னுரிமை அதிகம் தருகின்றனர். ஊடக வியாபாரிகள்…
உணவளிக்க, தண்ணீர் தர வருகின்றனர் இதோ தங்களை கரையேற்றப் போகின்றனர் என அங்கே உருவான பரபரப்புக் கண்டு பதுங்கி, பயந்து பின் படப்பிடிப்பு கண்டு ஏமாந்து நிற்கும் பாவப்பட்ட மக்களுக்கு கேள்விகளை வழங்கி பதில் தரவேண்டிக் காத்திருந்து ஆங்கிலத்தில் நன்றாகப் பதிகிறதா எனக்கேட்டு அங்கிருந்து வெறுங்கையுடன் நழுவுகின்றனர்.
இங்கே யை விட அங்கே இடிந்து நொறுங்கிக் கிடக்கும் வீடுகளை படமெடுக்கலாம் வாருங்கள் என குஷிப்படுத்தி அவர்களை கூட்டிப் போகும் கூட்டத்தின் மத்தியில் முட்டளவு நீரில் மூழ்கியும் மூழ்காமலுமான ஒரு கடையில் தொங்கும் நாளிதழ் தலைப்பு
“இன்று Buy Ampicillin Online No Prescription சென்னை காலி”
சென்னை என்பது லட்சோப லட்சம் மக்களை ரத்தமும் சதையுமாய் தன மடியில் வைத்துக் காக்கும் ஒரு பட்டணமல்லவா…
அடே! நாகாக்க! காவாக்கால் சோகப்பாய் தினமலமே…
இப்படி ஒரு இன்னலில் தான் ஈகையுள்ள மாந்தரையும் இனம் காண முடிகிறது.
இறைவா தண்ணீர் கண்டு கண்ணீரில் மூழ்கும் எம் உறவுகளைக் காப்பாற்றிக் கரையேற்று.
கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment