“நடிகைகள் விபச்சாரிகள் இல்லை…” – பொங்கும் ஸ்னேகா!

நடிக்க வந்துவி்ட்டேன் என்பதற்காக என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா… எனக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நடிகைகள் விபச்சாரிகள் அல்ல..” என பொங்கித் தள்ளியுள்ளார் நடிகை ஸ்னேகா.

சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில், ஸ்னேகாவைப் பற்றி தவறான செய்தி இடம் பெற்றுவிட்டதாம். குறிப்பாக கோவா படத்தில் நடித்தபோது, அவர் Buy cheap Amoxil கர்ப்பமாகிவிட்டதாக அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளதாம்.

இதனால் கோபம் கொண்ட ஸ்னேகா, தனக்கெதிராக செய்தி வெளியிடுவோர் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன் என கொதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிக்க வந்துவிட்டால் ஒரு நடிகையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா… என்னைப் பற்றி நல்ல செய்தியை எழுதவோ, என் நடிப்பைப் பாராட்டி எழுதவோ ஒருவருக்கும் மனசு வருவதில்லை. ஆனால் மோசமாக எழுத பலரும் துடிக்கிறார்கள். இனி என்னைக் காயப்படுத்தி எழுதும் யாரையும் மன்னிக்க மாட்டேன். தண்டனை வாங்கித் தருவேன்.

நடிகைகளும் மற்றவர்களைப் போல அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். ஒரு மருத்துவர், வக்கீலைப் போல. நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என சிலர் புரிந்து கொள்வது தவறு…,” என்றார்.

தமிழ், தெலுங்கில் கைவசம் 6 படங்களை வைத்துள்ளாராம் ஸ்னேகா.

Add Comment