பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தின் இலக்கிய விழா

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தின் இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்புவிழா
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்புவிழா 25/02/2011 அன்று துபை, தேராவில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இரவு 6.30 மணிமுதல் 11.30 மணிவரை சிறப்பாக நடந்தது.விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து துணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரையாற்றினார்.விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கவிச்சித்தர் மு.மேத்தா, டாக்டர் சேமுமு முகம்மதலி, டாக்டர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன், கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கைப்பிரபல பாடகி நூர்ஜஹான், ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அல்ஹாஜ் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கவிஞர் அத்தாவுல்லா வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து தேரிழந்தூர் தாஜுதீன் தன் காந்தக் குரலால் பாடல் பாடி கூட்டத்தைக் கவர்ந்தார். பின் விருந்தினர்கள் மேடைக்கழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைச்செயலாளர் கிளியனூர் இஸ்மத் (அமீரக) இவ்அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப்பேசினார்,பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சிறந்த பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் Bactrim online அதிகமான ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்வின் அடுத்த கட்டமாக, கீழை சீனா தானா அவர்களின் “நான் நேசிக்கும் திருக் குரான்” என்ற குறுந்தகடு வெளியிடப் பட அதை அல்ஹாஜ் சையது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.அதைத் தொடர்ந்து காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் “ திப்புசுல்தான்” காவிய நூல் டாக்டர் சேமுமு முகம்மதலி அவர்களால் வெளியிடப்பட அதன் பிரதியை சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.இப்பெருவிழாவில் கவிச்சித்தர் மு.மேத்தா, சேமுமு முகம்மதலி, காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் மற்றும் ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அல்ஹாஜ் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா சிறப்புரை ஆற்றினார்கள்.விழாத் தலைவர் கலையன்பன் முகம்மது ரஃபீக் நிகழ்வை சிறப்பாகத் தொகுத்து வழங்க, துணைத்தலைவர் எஸ். எம். பாரூக் அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்த்து. விழா ஏற்பாடுகளை விழாத்தலைவர் கலையன்பன் ரஃபீக், விழாச் செயலர் கீழைராஸா, உப தலைவர்கள் மக்ரூப் காக்கா, எஸ். எம். பாரூக், துணைச்செயலாளர்கள் கிளியனூர் இஸ்மத் மற்றும் அதிரை ஷர்புத்தீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.நிகழ்விற்கு புரவலர்களும் ,ஈமான் அமைப்பு உள்ளிட்ட சகோதர அமைப்பின் அங்கங்களும், சகோதர சமுதாய சகோதர்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.நிகழ்வின் வீடியோ கவரேஜ்ஐ சங்கம்ம் டிவி கவனித்துக் கொள்ள, நிழல்படங்களை முதுவை ஹிதாயத் மற்றும் நவ்பல் ஆகியோர் கவனித்துக் கொண்டனர், விழாவின் தன்னார்வ தொண்டர்களாக குத்தாலம் அஸ்ரப் அலி, அவர் மகனார், மதுக்கூர் ரூமி மற்றும் சங்கமம் குழுவினர் சிறப்பாக செயல்பட்டார்கள் —
MUDUVAI HIDAYATH

Add Comment