உலகின் முதல்நிலை பணக்காரர் ஹோஸ்னி முபாரக் – அதிர்ச்சித் தகவல்!

எகிப்தில் மக்கள் புரட்சியை அடுத்து, பதவி விலகி வெளிநாட்டில் தங்கியுள்ள எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பற்றி “உலகின் முதல் பணக்காரர்” என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் “தி கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: “எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் ஆடம்பர பங்களா மற்றும் ஓட்டல்களில் Buy Amoxil முதலீடு செய்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ளார். இவற்றைக் கணக்கிட்டால் இவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதன்படி பார்த்தால், உலகின் முதலாம் நிலை பணக்காரர் இவர் தான்” என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பணக்காரர் பட்டியலில் 2,40,750 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ள மெக்சிகோ தொழிலதிபர் கார்லஸ் சிலிம், 2,38,500 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரை இவ்விதமாக ஹோஸ்னி முபாரக் முந்தி உள்ளார் என்று அந்தப் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

Add Comment