தயவுசெய்து…….வெள்ளப்பாதிப்பையும் அரசியலாக்காதீர்.

தயவுசெய்து…….வெள்ளப்பாதிப்பையும் அரசியலாக்காதீர்.
எல்லா தொலைகாட்சி ஒளிபரப்பிலும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். அங்கு பாதிப்பு இங்கு பாதிப்பு என்று சொல்கிறார்கள். பாதித்த இடங்களில் இருந்து உடனடியாக தகவல்களை சேகரித்து சொல்கிறார்கள். இவ்வாறு ஒளிபரப்படும் செய்திகளின் இடையே “சிறிய இடைவேளைக்கு பிறகு” என்று சொல்லிவிட்டு 10 விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். அப்படி ஒளிபரப்படும் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தால் என்ன குறைந்தாபோவார்கள்?
அத்தனை சேனல்களும் இரண்டு நாள் வருமானத்தை கொடுத்தாலே போதும் வெள்ள சேதத்தை ஈடுகட்டிவிட முடியும் என்று தோன்றுகிறது.
திரைப்படம், சீரியல், நேர்காணல், என எல்லா நிகழ்ச்சியினிடையிலும் விளம்பரம் ஒளிபரப்பி வருமானத்தை ஈட்டும் இந்த தொலைகாட்சி நிறுவனகள், மக்கள் படும் அவதியை படம் பிடித்து காட்டி அதிலும் பணம் சம்பாதிக்கும் கேவலமான நிலையே இன்று நிலவியிருக்கிறது.
பாதிப்படைந்த இடங்களையும், மக்களையும் காட்டி தேடிய வருவாய் மக்களுக்கே அல்லவா சென்றடையவேண்டும். (ஒரு திரைப்படத்தை கோடி கொடுத்து வாங்கி அதனை ஒளிபரப்புவதன் மூலம் வருவாய் ஈட்டிக்கொள்ளும் இந்நிறுவனங்கள்) மக்களையும் அவர்கள் வசிக்கும் வெள்ளம் சூழ்ந்த இடங்களையும் நேரலையில் காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அவர்கள் வைத்துக்கொண்டு, அந்த பகுதி மக்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர், இங்கே இப்படி என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக நிதி உதவி செய்து நிலைமையை சரிசெய்ய முன் வராதது ஏன் ?
ஆளும் கட்சி சரியில்லை என்று எதிர் கட்சியும், ஆளும் கட்சி நடத்தும் தொலைக்காட்சியில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது என்றும், எதிர் கட்சிகள் நடத்தும் தொலைகாட்சியில் ஒரு மீட்பு பணியும் நடைபெறவில்லை என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். குறை சொல்வதை நிறுத்தினாலே ஒழிய இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வாக்களிதவர்களே. இவர்கள் எதிர்கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்று ஆளுங்கட்சி ஒரு போதும் பேதம் பார்த்துவிட முடியாது. அப்படி பார்க்குமானால் அந்த கட்சி மக்களுக்காக ஆட்சிக்கு வந்த கட்சியாக இருக்கமுடியாது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க எல்லோரும் பாடுபடவேண்டும். ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதத்தை களைந்து ஒருமித்து எல்லோரும் ஒன்று கூடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இங்கேயும் கட்சி kகொடி பிடிப்பதை தவிர்த்தல் நல்லது. ஓட்டுக்கு வேலை செய்வதை விட்டுவிட்டு, மக்களில் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட வேண்டும். இங்கேயும் அரசியல் வேண்டாம். தனக்கு வந்தாலே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்று கூறுவார்கள்.
மக்காளாக இருந்து பார்த்தாலே அவர் படும் அவதி தெரியும். பாதிக்கப்பட்ட இடங்களை வானத்தில் இருந்து பார்வையிட்டு என்ன பயன். அவர்கள் பரிதவிப்பை இந்த Cialis online கட்சிகாரர்களால் உண்மையாக உள்வாங்கிட முடியுமா?
எல்லோரும் ஒன்று கூடி இயற்கையின் இந்த சீற்றத்தில் இருந்து மக்களை மீட்க போதிய (இல்லை நிறைவான) நடவடிக்கையை அதிகார வர்கக்கங்களும், செல்வந்தர்களும், மக்களால் பயனடையும் எல்லா துறைகளும் செய்ய முன்வரவேண்டும் இல்லை இல்லை செய்யவேண்டும்.
பிரதிபலன் எதிர்பார்க்காமல் எல்லோரும் செயல்பட்டாலே அன்றி தீர்வு என்று ஒன்று கிடைக்காது.
தயவுசெய்து…….வெள்ளப்பாதிப்பையும் அரசியலாக்காதீர்.

Shaheer Abubacker

Add Comment