பஹ்ரைனில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அரசு எதிர்ப்பு பேரணி

ஆயிரக்கணக்கான Buy cheap Lasix அரசு எதிர்ப்பாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மனாமாவில் அல் ஹுதைபியா மாளிகையை நோக்கி பேரணியை நடத்தினர்.

மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபாவும், பிரதமர் ஷேக் கலீஃபா பின் ஸல்மான் அல் கலீஃபாவும் ராஜினாமாச் செய்யவேண்டுமெனக் கோரி இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் இங்குதான் நடைபெறும். கடந்த 2002-ஆம் ஆண்டு மன்னருக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டத்தை மாற்றி எழுதவேண்டுமென எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 21 தினங்களாக நடைபெறும் அரசுக்கெதிரான போராட்டத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்குமேற்பட்டோருக்கு காயமேற்பட்டுள்ளது.

மனாமாவில் பியர்ல் சதுக்கத்திலிருந்து எதிர்ப்பாளர்கள் பேரணியை துவக்கினர். கடந்த சனிக்கிழமை எதிர்ப்பாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தியிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Add Comment