தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பதின்மூன்று இலட்சம் வெள்ள நிவாரண நிதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
பதின்மூன்று இலட்சம் வெள்ள நிவாரண நிதி

தமிழகத்தில் பல பகுதிகளில் மழை வெள்ளம் கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுவர், கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் சிரம்மத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்.

இம் மக்களின் துயரம் துடைத்திட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு உண்ண உணவுகளை தயார் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாய மக்களை நேரடியாக சென்று தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

ஆகவே, இதற்கு தேவையான பொருளாதாரங்களை தமிழ்நாடு முழுவதும் திரட்டும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெள்ளநிவரண நிதி வசூலை கடந்த இரண்டு நாட்கள் நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை உட்பட 25 கிளைகளில் மக்களிடம் பணமாகவும், பொருளாகவும், பெண்களிடம் தங்க வளையல், கொலுசு, துணிமணிகள், பழைய சாமான்களாகவும் வாரி வழங்கினார்கள் அதனை விற்பனை செய்து அதன் தொகையான ரூபாய் பதின்மூன்று இலட்சத்தையும் மேலும் இரண்டு இலட்சம் மதிப்புள்ள நிவரண பொருட்களுடன் , மீட்பு பணிக்கு கடையநல்லூரிலிருந்து இரண்டு பஸ்களில் நூறு தொண்டர்களுடன் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றார்கள். இவை அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை வழிகாட்டுதலின் படி சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையாக வினியோகம் செய்யப்படும்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பைசல், தாஹா, அப்பாஸ், அஜீஸ், ஜாகிர், சாகிப் கிளை அனைத்து கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், குறிச்சிசுலைமான், நிரஞ்சன் ஒலி, பாதுஷா, ஆகியோர் கலந்து கொன்டனர்.IMG-20151205-WA0031 IMG-20151205-WA0030 buy Cialis online size-large wp-image-46074″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/IMG-20151205-WA0031-1024×681.jpg” alt=”IMG-20151205-WA0031″ width=”730″ height=”485″ /> IMG-20151205-WA0029

Add Comment