ஒமான்:போரா​ட்டம் எதிரொலி – அமை​ச்சரவையில் அதிரடி மாற்றம் – காபூஸ் நடவடிக்கை

அரசுக்கெதிரான போராட்டம் நடைபெறும் ஒமானில் அந்நாட்டு மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் அமைச்சரவை மற்றும் நிர்வாகத்துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சீர்திருத்தம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கோரி ஒமானில் சில நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து அமைச்சர்களையும் பதவியை விட்டு விலக்குவது மற்றும் அவர்களது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் சுல்தான் காபூஸ் 2 முக்கிய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நபர்களை Amoxil No Prescription நியமித்துள்ளார். மேலும் நிர்வாகத் துறையில் புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்..

ஒமான் ராயல் நீதிமன்றப் பொறுப்பு அமைச்சரான காலித் பின் ஹிலால் பின் ஸவுத் பின் ஸவுத் அல் புஸைதி நீக்கப்பட்டு செய்யத் அலி பின் ஹமுத் அல் புஸைதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுல்தானின் அலுவலக விவகாரத்துறை அமைச்சரான சுல்தான் பின் முஹம்மது அல் நூமானி நீக்கப்பட்டு ஜெனரல் அலி பின் மாஜித் அல் மமாரி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் நீதிமன்ற விவகாரத்துறையில் பொதுச்செயலாளராக நஸ்ர் பின் ஹமுத் பின் அஹ்மத் அல் கிந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஒமான் செய்தி நிறுவனமான ONA வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் ஒமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து தென்மேற்கில் 500 கி.மீ தொலைவிலுள்ள எண்ணெய் வளமிக்க ஹைமாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அதிகமாக அரசு முதலீடுச் செய்ய அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ளது.

ஒமானில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பாக அரண்மனையில் நடந்த புரட்சியின் வாயிலாக சுல்தான் காபூஸ் மன்னர் பதவியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment