தோல்வி முடிவல்ல…

தோள்கள் சுருங்கி
தோல்களும் சுருங்கி
துவண்டு போன மனதிற்கு
துண்டு போடும் வெற்றிக்கு
மாற்றுப் பெயர் தோல்வி!

அவமானங்கள்
அரவணைக்கும்
வெகுமதிகள்
வெகுதொலைவில்
நின்று Levitra No Prescription கொண்டு
நம்மை மென்று தின்னும்!

அடி பட்ட எண்ணத்திற்கு
ஆறுதலான வார்த்தைகளும்
வலியாய் தோன்றும்!

சுமையான நினைவுகளை
ரத்து செய்துவிட்டு
இரத்தத்திற்கு சத்திடுங்கள்;
வலிகளைப் பலி வாங்க;
வெத்தாய் இருந்த
வெற்றிக்கு வித்திடுங்கள்!
-யாசர் அரஃபாத்

Add Comment