அன்புள்ள மகனுக்கு..

பருவத்தில் மறுத்துவிட்டப்

பள்ளிச் சீருடையால்;

வயதுக் கடந்து

வளைகுடாவில்

உடமையான Doxycycline No Prescription உடை!

புதிய ஆடைகள்

உன் மேனியை

மணக்கச் செய்ய;

கம கமக்கும்

ஈர வியர்வை ஆடை

தினமும்!

நமக்கென்றுத் தனிவீட்டில்

உனக்கு ஒரு அறை எழுப்ப;

ஒரு அறையே வீடாக்கி;

அறியாதவர்களுடன்

நான் இங்கே!

கண்டிப்புகள் கசப்பாய்;

கொஞ்சம் வெறுப்பாய்;

உண்மை நெருப்பாய்

தோன்றுகிறதா;

என் தந்தை

விசும்பல் இப்போதுதான்;

இதயத்தில் இறுக்கமாய் எனக்கு;

மீண்டும் ஒரு சந்தர்பம்

வேண்டாம் உனக்கு!

-யாசர் அரஃபாத்

Add Comment