மதத்துவேஷ பாஜகவினரை அடித்து விரட்டிய இந்து சகோதரர்கள்!

மதத்துவேஷத்தை பேசியவர்களை அடித்து விரட்டிய இந்து சகோதரர்கள்!

சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு இடம் வாங்கி பணிகளைத் துவக்கிய போது அப்பகுதியில் உள்ள காளிதாஸ் என்ற பாஜக நிர்வாகி இந்துக்களைத் திரட்டி பள்ளிவாசல் பணியைத் தடை செய்தார். பல அப்பாவி இந்துக்களைத் தூண்டிவிட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கி சைதாப்பேட்டையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க மாட்டோம் என்று சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வன்முறையைத் தூண்டினார்.

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட Buy cheap Levitra பகுதியான சைதாபேட்டைக்கு எந்த அரசியல் கட்சியும் செல்லவில்லை. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் உணவுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்தனர். மலையாய் தேங்கிய குப்பைகளையும் லாரிகளைக் கொண்டு ஜமாஅத் செலவில் தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்தனர்.

நிலமை சீரானபின் நேற்றைய தினம் – சனிக்கிழமை 05.12.15 – காளிதாஸ் பாஜக கொடியைக் கட்டிக் கொண்டு நிவாரண நாடகம் நடத்த சைதாப்பேட்டை மக்களிடம் வந்தார்.

கோபத்தில் கொந்தளித்து திரண்ட அப்பகுதி இந்துக்கள், பள்ளிவாசல் இங்கே கட்டக் கூடாது என்று கைஎழுத்துப் போட்டவர்கள் காளிதாசின் வாகனத்தை உடைத்து இங்கே பாஜக காரன் எவனும் வரகூடாது என ஓட ஓட விரட்டியுள்ளனர்.

சரியான சேவைக்கு முன்னால் மதவெறி தோற்று விடும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

Comments

comments

Add Comment