பேரிடர் மீட்புச் செய்திகளை பரப்புவதில் பேதம் பார்ப்பது, பேரிடரை விட கொடுமையானது.

பேரிடர்_மீட்புச்_செய்திகளை பரப்புவதில்_பேதம்_பார்ப்பது, பேரிடரை_விட_கொடுமையானது.

சுமார் 30000 தொண்டூழியர்கள். முழுக்க முழுக்க இளைஞர்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள். டிசம்பர் 6-இல் திரண்டிருக்கிறார்கள். எதற்கு?

பிறமத வழிபாட்டுத் தலத்தை இடிக்கும் ‘கரசேவை’க்காகவா? பிறமக்கள் பன்றிக்கறி சாப்பிட்டிருக்கிறார்களா என சோதித்து, தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் கொல்வதற்காகவா? பிறசமூகத்தின் அப்பாவிப் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்துவதற்காகவா? இல்லை!

வேறு எதற்கு?

சென்னை மற்றும் கடலூரில் பேரிடர் மீட்பில் களமாடுவதற்காகவே திரண்டிருக்கிறார்கள். த.த.ஜ மட்டுமல்ல, தமுமுக, முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ என அத்தனை முஸ்லிம் அமைப்புகளும், மஹல்லா ஜமாஅத்துகளும் களத்தில் நிற்கின்றன.

முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான செய்திகளை ஊதிப்பெரிதாக்கும் ஊடகங்கள், அவர்களின் இந்த ஆக்கப்பூர்வ பணிகளை, உரிய முறையில் வெளியிட வேண்டும்.

பேரிடர் மீட்புச் செய்திகளை பரப்புவதில் பேதம் பார்ப்பது, பேரிடரை விட கொடுமையானது.

ஆளூர் ஷாநவாஸ்//

தவ்ஹீத் ஜமாஅத் குப்பைகளை அள்ளும் விவகாரம், அரசாங்கத்தின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இழந்தும் விடும் என தவ்ஹித் ஜமாஅத்தின் அறிவிப்பால் ஆட்டம் கண்டு மிரட்டிய buy Lasix online அரசாங்கம்:-

அசராத தவ்ஹீத் ஜமாஅத்! சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அரசு நிர்வாகம் அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டிவருவது நாம் அனைவரும் அறிந்ததே!

இதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே மனித நேயப் பணிகளில் சளைக்காத தவ்ஹீத் ஜமாஅத் குப்பை அள்ளும் பணியிலும் களமிறங்கியது.

இதனால் ஆட்டம் கண்ட அரசு நிர்வாகம், இப்பணியையும் நீங்கள் செய்தால் அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிடும். எனவே இப்பணியை நிறுத்த வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் டிஎன் டிஜே மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் இன்று பேசியுள்ளனர்.

ஒருபக்கம் மிரட்டும் தொனியில் பேசிவிட்டு மறுபுறம், “எங்களால் மட்டுமே மலைபோல் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை துரிதமாக அள்ள முடியாது; தன்னலமற்ற உங்கள் கூட்டத்தால் மட்டுமே முடியும்; எனவே எங்கள் ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்து உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இருந்தாலும் “அரசின் வாக்குறுதி வெறும் வெத்துப்பேச்சே; உங்களைப் போன்ற பிள்ளைகள்தான் எங்களுக்கு உதவனும்” என்ற சென்னை மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், சென்னையை சுத்தப்படுத்தாமல் விடுவதில்லை என்ற உறுதியோடு சளைக்காமல் தொடர்ந்து களத்தில் உள்ளனர் டிஎன்டிஜேவின் தொண்டர் படையினர்.

தென்சென்னையில் உள்ள நெசப்பாக்கம் பகுதியில் தேங்கி துர்நாற்றம் எடுக்கும் குப்பைகளை உடனே அள்ளச் சொல்லி அந்தப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இன்று 07-12-15 காலை அந்த குறிப்பிட்ட இடத்திற்கு துப்புரவுப்பணிக்குச் சென்ற டிஎன்டிஜே தொண்டர் படையினர் அவர்களை ஆசுவாசப்படுத்தி, “நாங்கள் உங்கள் பகுதியை சுத்தம் செய்து தருகின்றோம். அதற்காத்தான் இன்று உங்கள் பகுதிக்கு வந்துள்ளோம்” என்று கூறிய உடன் மகிழ்ச்சியடைந்து மறியலைக் கைவிட்டனர்.

அந்தப்பகுதி இன்று இரவுக்குள், டிஎன் டிஜேவின் தொண்டர் படையால் “கிளீன் இண்டியா”வின் ஒரு பகுதியாக கட்டாயம் மாற்றப்பட்டுவிடும். இன்ஷா அல்லாஹ்…

ஆனால் அதே நேரம் கிளீன் இண்டியா என படம் காட்டிய காவிக்கயவர்கள் யாரையும் அந்தப்பகுதியில் காணவில்லை;

இவ்வளவிற்கும் அந்தப்பகுதியில்காவிகளின் ஆக்கிரமிப்புகள் அதிகம்;

இந்து முன்னணியினர் அதிகமாக இருக்கக்கூடிய அந்தப்பகுதியில் இருந்த அனைத்து காவிகளும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த மழைவெள்ளத்தின் வாயிலாக காவிச்சாயம் கரைந்து போயுள்ளது.

Add Comment