சென்னையில் அரசினைத் தவிர தனிநபர்கள் மருத்துவ முகாம்களை நடத்த அனுமதியில்லை…

சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இலவசமாக மருத்துவ முகாம்களை நடத்த மருத்துவர்களை ஒருங்கிணைக்குமாறு என்னை அழைத்திருந்தது. அதையொட்டி, மருத்துவர்களை ஒருங்கிணைக்க நண்பர்களோடு பேசினேன். எனக்கு வந்த பதில் – அரசினைத் தவிர தனிநபர்கள் / தன்னார்வல அமைப்புகள் / நிறுவனங்கள் யாரும் மருத்துவ முகாம்களை நடத்த அனுமதியில்லை. இதை சொன்னது மாநகராட்சி கமிஷ்னர்.

ஹோலோகாஸ்ட் ஆட்சியா தமிழகத்தில் நடக்கிறது ? இல்லை நாம் தான் முடியாட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா ?

தமிழகத்தின் மருத்துவர்களே, கையிலெடுங்கள். இது உங்கள் நகரத்துக்கான கடமை. ஒரு மாநகரமும், ஒரு மாவட்டமும் ஏதேனும் பெருநோய்கள் வருமா என்கிற் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கக் கூடிய Bactrim online ஒரு நேரத்தில், அரசு மட்டுமே மருத்துவ முகாம்களை நடத்தினால், எத்தனை மக்களை அது கவனிக்கும்.

அரசிற்கு பொது சுகாதாரம், தனியார் மருத்துவ சேவைகளின் மீது தயக்கங்கள் இருந்தால், தாராளமாக விதிமுறைகளையும், வழிமுறைகளையும் வகுத்து தரட்டும். அதை விட்டுவிட்டு, மருத்துவ முகாம்களுக்கு தடை விதிப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம்.. இது நாள் வரை இந்த அரசு ‘மர்ம காய்ச்சல்’ என்றப் பெயரில் டெங்கு இறப்புகளை மறைத்ததை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறதா ? எங்களுக்கு தெரியாது உங்களுடைய இலட்சணம்.

நீங்கள் சொல்லாமல் ஏரிகளை திறந்துவிட்டு ஒரு முறை உயிர்களோடு விளையாடியது பத்தாதா ? உங்களால் ஒழுங்கான எச்சரிக்கையையே தர முடியவில்லை. உங்களை நம்பி சென்னையின் 60 இலட்சம் உயிர்களும் இருக்க வேண்டுமா ? மெடிக்கல் டூரிஸத்தின் தலைநகரம் என்று தனியார் மருத்துவமனைகளை முன்னிறுத்தி மார் தட்டிக் கொண்டு, இப்போதென்ன திடீர் ஞானோதயம் ?

URGENT: LET’S SHATTER THIS NONSENSE

ஊடக நண்பர்களுக்கு, மாநகராட்சி கமிஷ்னரை பதில் சொல்ல சொல்லுங்கள். இந்த முட்டாள்தனமான தடையை நீக்க சொல்லுங்கள்.

‪#‎SaveChennai‬ ‪#‎ChennaiMedicalHelp‬

Credit should goes to good friend Vijayasankar Ramachandran & his colleague Mr. Radhakrishnan both from FRONTLINE

Add Comment