நீங்கள் இந்துவா, இஸ்லாமியரா, கிறிஸ்து வரா ? எம்மதமாயினும் சரி, ஒரே ஒரு நிமிடம் பிரார்த்தனை. !!

நீங்கள் இந்துவா, இஸ்லாமியரா, கிறிஸ்து வரா ? எம்மதமாயினும் சரி, ஒரே ஒரு நிமிடம் பிரார்த்தனை. !!

இன்று இரவு 9 மணியளவில் கோவை காந்திபுரத்திலிருக்கும் ராயல் கேர் மருத்துவமனையின் மருந்துகடை முன்பாக என் மகனுக்கு மருந்து வாங்க நான் என் மனைவி மகன் மூவரும் நின்றிருந்தோம். அப்பொழுது என் அருகில் கையில் மருந்த சீட்டுடன் நின்றிருந்த ஒரு வயதான இஸ்லாமிய பெண்மணி என்னைப்பார்த்து என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை அம்மா என்று கூறினேன். (உண்மையில் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. ) நீங்கள் பர்மாபாய் கடைக்கு (கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம்.) வருவீர்களல்லவா, நான் பாயின் அம்மா.! (கடையின் உரிமையாளர்) என்னை உங்களுக்கு நினைவில்லையா என்று கேட்கும்போதே அவர் கண்கள் லேசாக கலங்கியது. (நான் அந்தக்கடைக்கு பலமாதங்களுக்கு முன் ஒருமுறைதான் சென்றிருக்கிறேன். யாரிடமும் நான் அன்னியோன்யமாக பேசும் பழக்கம் எனக்கு உண்டென்பதால் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.) மேற்கொண்டு அவரைசங்கடப்படுத்த விரும்பாமல் நலமாக இருக்கிறீர்களா அம்மா, இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது, பாய் அடிபட்டுவிட்டார் என்று கூறிக்கொண்டே தேம்பினார். அவரது மகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கோவை உக்கடத்தில் பைக்கில் சென்ற போது வேகமாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஆகியிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை அவர் மகன் கண்விழிக்கவில்லை. சுய நினைவின்றி மருத்துவமனையில் இருக்கிறார். கடையையும் மகனையும் இவர்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார். அதனால் சரியான வியாபாரமும் இல்லை.
இவையனைத்தையும் கண்ணில் நீர் வழிய கூறிவிட்டு என் மகனுக்காக பிரார்த்தனை செய்வீர்களா ? என்று என்னையும் என் மனைவியையும் பார்த்துகேட்டார். எனக்கு மனம் மிகுந்த கனம். சற்று முன்னர்தான் ஓராண்டுக்கு முன்பு சாலை விபத்தில் மறைந்த என் தந்தையின் புகைப்படத்தை ஒரு ஸ்டுடியோவிலிருந்து வாங்கிவிட்டு online pharmacy no prescription மருத்துவமனைக்கு வந்தேன். என் தந்தையின் அன்பு நிறைந்த முகம் என் மனதில் நிறைந்திருக்க, மிகுந்த துயரத்துடன் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். இங்கே அந்த தாயின் கண்ணீர். !
அந்த தாயின் ஆற்றாமை மிகுந்த, ஆறுதல் தேடும் கண்ணீரை கண்டதும் நானும் என் மனைவியும் இயன்றவரை அவருக்கு ஆறுதல் கூறினோம். பணம் எத்தனை போனாலென்ன, கண்விழிக்காமலிருக்கும் என் மகனை நான் எத்தனை நாட்கள் பாத்துக்கோண்டேயிருப்பது? அவன் எப்போது கண்விழிப்பான் ? என்ற அவரின் அழுகைக்கும் கேள்விக்கும் என்னால் ஆறுதல் கூறமுடியவில்லை. கனத்த மனதுடன் நாளை நேரில் வந்து பார்க்கிறோம் அம்மா. அவர் விரைவில் குணமடைந்து விடுவார். கவலைப்படாதீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வீடு வந்தோம்.
மிகுந்த மனத்துயருடனேயே இதைப்பதிவிடுகிறேன். நண்பர்களே நீங்கள் என்ன மதமாயினும் சரி. உங்களால் முடிந்தால் ஒரு நிமிடம் அந்த பெயர்தெரியாத இஸ்லாமிய சகோதரருக்காக பிரார்த்தியுங்கள். அவர் விரைவில் பூரண குணமடைய ஏதேனும் ஒரு தெய்வம் உதவட்டும்.
முடிந்தால் இதை ஷேர் செய்து பிரார்த்தனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.
கோவை நஞ்சப்பா சாலையில் ராயல் கேர் மருத்துவமனையில் அறை எண் 102 ல் சிகிச்சையில் இருக்கிறார். மதப்பெரியவர்கள் யாரேனும் இயன்றால் நேரில் சென்று அவருக்காக பிரார்த்தியுங்கள். அந்த தாயின் கண்ணீரை இறைவன் நிறுத்தட்டும்.!

முகமறியாத இன்னொரு உயிருக்காக செய்யும் உண்மையான பிரார்த்தனையை விட உயர்ந்தது உலகில் வேறேதும் இல்லை.!!!

கணேஷ்குமார், கோயம்புத்தூர்.

Please share this.

Add Comment