அஸீயும் நானும்…

பொழிந்து கொண்டிருக்கிறது வானம்
முற்றம் நனைக்கும் சாரல்
ரசித்த படி நான்…

பொழிவின் நினைவலைகள் மட்டும்
எப்போதும் பசுமையாய் நெஞ்சில்
அவ்வப்போது வந்து போகும்…

ஆம்பூரில் ஆலங்கட்டி குளியல்
மணலாற்றில் நண்பர்களோடு ஆட்டம்
சென்னை மாநகர் சுற்றி தெப்பலாய் நனைந்தது
நள்ளிரவில் மருந்தகம் தேடி நனைந்தது
நீள்கிறது பட்டியல் …

“பாப்பாவை கொஞ்சம் புடிங்க…”
துணைவியின் குரல் நினைவலைகள் அறுக்க ,
ஓடி வரும் வாரிசு அள்ளி , மீண்டும்
வருகிறேன் முற்றம்…

சிறு கைகளை மேலும் கீழுமாய் Buy Viagra ஆட்டி
பொழிவின் ஆதி அந்தம் சொல்கிறாள்
என்னை புறம் தள்ளி பொழிவிலாட
எத்தனிக்கிறாள்…

அறுந்த நினைவலைகள் ஒட்டிக்கொள்ள
அடுத்த நினைவிற்கு ஆயத்தமாய்
நனையப்போகிறோம் அஸீயும் நானும்…

* அஸீ – செல்ல மகள் அஸீரா நசீர்

Add Comment