சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது ஜெயா டிவியில் மட்டும் ஆனால் உண்மை அப்படியா?

“சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. – கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும். நிஜ உலகில் 24 மணி நேரமும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்களை இந்த மழை முற்றாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுடைய குடியிருப்புகளையும் Buy cheap Amoxil வாழ்வாதாரத்தையும் வாழ்வின் மீதும் அரசின் மீதும் அவர்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்த மழை சிதைத்துப் போட்டிருக்கிறது. அவர்களுடைய குரலைக் கேட்க நீங்கள் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று நேரம் திறந்து வைத்திருந்தாலே போதும். இன்று காலை வரை ஒரு பாக்கெட் பால் 100 ரூபாய்க்கு பல இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. பிரெட் கிட்டத்தட்ட அதே விலை. பல பகுதிகளில் குடிநீர் இல்லை. மழை நீரைச் சேகரித்துப் பலர் குடித்து வருகிறார்கள். இதுவரை அதிகாரபூர்வமாக 245 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் பெரும் பகுதியினர் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தவர்கள். ஆம், அப்படித்தான் அவர்கள் தங்களை இப்போது அறிமுகம் செய்துகொள்கிறார்கள். இதுதான் அவர்களுடைய புதிய அடையாளம். இந்தப் பதிவுகள் நமக்கு உணர்த்தும் அழுத்தமான செய்திகள் இனி, நாம் நமக்குள் உதவிக்கொண்டால்தான் எந்தவொரு பேரவலத்தில் இருந்தும் மீளமுடியும். இந்த இரு பெரும் உண்மைகளையும் உணர்ந்திருந்தவர்கள் மட்டுமே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். அவர்களால்தான் சென்னை இன்று மீண்டுக்கொண்டிருக்கிறது. கிடைத்த காலி டிரம்களை உருட்டைக் கட்டைகள் மீது வைத்து கட்டி அதன்மீது வெள்ளத்தால் மூழ்கி யிருக்கும் மக்களை அமர வைத்து இழுத்துச் சென்றவர்கள்தான் அதிகம் பேரைக் காப்பாற்றியிருக்கிறார் கள். கப்பல் படையும் பேரிடர் மீட்புப் படையும் ராணுவமும் அதற்குப் பிறகே மிதந்து வந்து சேர்ந்தன. முழங்கால் தண்ணீருடன் தவிக்கும் முகங்களையும் பீறிட்டு அழும் குழந்தைகளையும் டிவியில் பார்த்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது என்று தவித்தவர்கள் பலர். சமூக வலைத்தளங்கள் பிரமாண்டமான ஒரு நெட்வொர்க்காக விரிவடைந்து நேசக்கரம் நீட்டுபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்ததை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நிவாரண உதவியுடன் முதலில் சென்றவர்கள் இவர்களே. இப்போதும் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் வாட்ஸ் அப்பையும் திறந்தால் அங்குமிங்கும் உத்தரவுகளும் செய்திகளும் பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. கோட்டூர்புரத்தில் மெழுகுவர்த்தியும் கொசுவர்த்தி சுருளும் தேவை! எங்களிடம் ஆயிரம் சப்பாத்திகள் இருக்கின்றன, எங்கே கொண்டு வரட்டும்? குப்பைகளைத் தள்ள பெரிய கைப்பிடியுடன்கூடிய மாப் ஸ்டிக் தேவை! உணவு போதும், டெட்டாலும் பினாயிலும் மாற்று உடைகளும் கிடைக்குமா…? பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுகிறது. சென்னை இந்த நிமிடம் வரை உயிர்த்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரும்பாலும் முகமற்றவர் களைக் கொண்டு துடிப்புடன் இயங்கும் இந்த நெட்வொர்க்தான். தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்திருப்பது ஓர் வெற்றிடத்தை மட்டுமே. இந்த வெற்றிடத்தையும் பாதிக்கப்பட்ட மக்களே இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறார் கள். … –Wts app News….Amin mohamed abu

Add Comment